Itraaaபிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், பிரமாண்ட தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனின் தயாரிப்பில், எப்படிப்பட்ட கேரக்டருக்கும் உடலை வருத்தும் நடிப்பு ராட்சன் விக்ரமின் நடிப்பில் அதிபிரமாண்டமாய் உருவாகியுள்ள படம் ஐ. இந்திய சினிமாவையே ஏன் உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைக்கும் ஒரு படம் ஐ என்றால் மிகையல்ல. கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக உருவாகி வந்த ஐ படம் இப்போது பொங்கல் விருந்தாக வர இருக்கிறது.

ஐ படத்தில் விக்ரம், பாடி பில்டர், மாடலிங், கூன் விழுந்த கோரமுகம், மிருக மனிதன்… என பல்வேறு பரிமாணங்களில் நடித்துள்ளார். இதை ஏற்கனவே வௌியான இப்படத்தின் டீசர் மூலமாக நாம் அறிந்தோம். அதுமட்டுமின்றி இப்படத்தின் டீசரை பார்த்தவர்கள் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டி பெரும் சாதனை படைத்துள்ளது. விரைவில் 1 கோடியை தொட இருக்கிறது. 1 நிமிட டீசரையே 90 லட்சம் பேர் பார்த்த நிலையில், இப்போது படத்தின் 2 நிமிட டிரைலரை இன்று(டிச. 18ம் தேதி) இரவு 10 மணிக்கு வௌியிட இருக்கின்றனர்.

மொத்த படத்தின் கதை மற்றும் சுவாரஸ்யத்தை 2 நிமிடங்களில் கொண்டு வர இருக்கின்றனர். பிரமாண்ட காட்சிகள், எமியின் அசத்தல் நடனங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக விக்ரமின் பல்வேறு பரிமாண தோற்றங்கள் மற்றும் நடிப்புகளை இந்த டிரைலரில் காணலாம்.

‘ஐ’ பிரமாண்ட டிரைலரை காண…  ரசிகர்களே, இரவு 10 மணி வரை காத்திருங்கள்…!!

Comments

comments