hqdefadult (1)தமிழ்த்திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் வேகமாக முன்னேறிக்கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன்மட்டுமே, என்று சொல்லுமளவிற்கு, அவருக்கு நாளுக்குநாள் வரவேற்பு அதிகமாகி வருகிறது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோருக்குக் கிடைப்பதைப் போன்ற வரவேற்பு சிவகார்த்திகேயனுக்குக் கிடைத்துவருவது மற்ற நட்சத்திரங்களையும் பொறாமைப்பட வைப்பதாக அமைந்து வருகிறது. கடந்த ஆண்டில் வெளிவந்த வருத்தப்படாதவாலிபர்சங்கம் படத்தின் வெற்றி அவரை ஒரேயடியாக உச்சத்திற்குக் கொண்டுசென்றது. தொடர்ந்து அவர் நடித்து வெளிவந்த படங்களும் வெற்றி பெற்ற இந்த ஆண்டில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாகி விட்டார் சிவகார்த்திகேயன்.

அவர் நடித்து அடுத்து வெளிவரஉள்ள காக்கிசட்டை படத்தின் மோஷன் போஸ்டர் மூன்று நாட்களுக்கு முன்னர் யூடியூப் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. சிலவினாடிகள் மட்டுமே உள்ள அந்த மோஷன் போஸ்டரை மூன்றே நாட்களில் மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்திருப்பது பெரியவிஷயமாகப் பேசப்படுகிறது. சிவகார்த்திகேயனுக்கு ஒவ்வொரு படத்திலும் சரியாகக்கிடைக்கும் டீம் தான் அதற்குக்காரணம் என்கிறார்கள். அவருடைய படங்களில் இடம்பெறும் சூப்பர்ஹிட்பாடல்களும், கலகலப்பான திரைக்கதையும், பொருத்தமான ஜோடியும் இருப்பது அவருக்கு பக்கபலமாக அமைகிறது என்று அதற்கான காரணத்தையும் சொல்கிறார்கள்.

ஒரு மோஷன் போஸ்டருக்கே, இப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்திருப்பது, அவருடைய வளர்ச்சி தற்காலிமான ஒன்று என்று விமர்சித்தவர்களுக்குக் கிடைத்த விமர்சனமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

Comments

comments