unnamed (2)இயக்குனர் தயாரிப்பாளர் மனோபாலா அவர்களின் மனோபாலா பிக்சர் ஹவுஸும் மற்றும் R.சரத்குமார், R.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டிஃபன் ஆகியோரின் மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘பாம்பு சட்டை’.

 

‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மனோபாலா தொடுக்கும் புதிய வேட்டையான ‘பாம்பு சட்டை’ படத்தை புதுமுக இயக்குனர் ஆடம் தாசன் இயக்குகிறார், இவர் இயக்குனர் ஷங்கரிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர். பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து வந்த பாபி சிம்ஹா இப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இவருக்கு கச்சிதமாக பொருந்தும் வண்ணம் அமைந்துள்ளது இந்தப் படத்தில் இவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரம். ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்ற அஸீஸ் அசோக் இசையமைப்பளாராக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பதிவு நாளை முதல் ஆரம்பமாகிறது. திட்டமிட்டபடி படமெடுத்து வெளியிடும் மனோபாலா இப்படத்தை அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியிட முனைப்பாக உள்ளார்.

Comments

comments