dfgvவருகிற பொங்கலுக்கு ஷங்கர் இயக்கியுள்ள ஐ, கெளதம்மேனனின் என்னை அறிந்தால், சுந்தர்.சியின் ஆம்பள, சிவகார்த்திகேயனின் காக்கி சட்டை, கார்த்தியின் கொம்பன் ஆகிய படங்கள் திரைக்கு வருவது உறுதி செய்யப்பட்டிருந்தது. அதனால் மேற்படி படங்களை தயாரித்துள்ள பட அதிபர்கள் தியேட்டர்களை கைப்பற்றுவதில் போட்டா போட்டியில் குதித்திருந்தனர். இதில் என்னை அறிந்தால் படத்தில் அஜீத்தும், ஆம்பள பட்தில் விஷாலும், காக்கி சட்டை படத்தில் சிவகார்த்திகேயனும் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளனர். ஆம்பள படத்தில் விஷால் மட்டுமின்றி சந்தானமும் போலீசாகத்தான் நடித்துள்ளார். ஹன்சிகாவும் போலீஸ் உடையில் நடித்திருக்கிறாராம். மேலும், பொங்கலுக்கு நாட்கள் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், , என்னை அறிந்தால் படங்களுக்கிடையே பலத்த போட்டி இருப்பதால், விஷாலின் ஆம்பள பின்வாங்குமோ என்று கருதப்பட்டது. ஆனால் விஷாலோ, எவனாயிருந்தாலும் வெட்டுவேன்  என்று அரிவாளோடு களத்தில் இறங்க தயாராகி விட்டார். அதோடு கொம்பனும் வந்து விடுவார் என்கிறார்கள்.

இந்தநிலையில், சிவகார்த்திகேயனின் காக்கி சட்டை படம் பொங்கல் கோதாவில் இருந்த பின்வாங்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனபோதும் பொங்கல் படங்களின் ரிசல்ட்டைப் பொறுத்து சீக்கிரமே அபபடம் திரைக்கு வந்து விடும் என்கிறார்கள்.

Comments

comments