myசில மாதங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு விழாவில் மீடியாக்களை சகட்டுமேனிக்கு திட்டித்தீர்த்தார் இயக்குநர் மிஷ்கின். அதாவது பத்திரிகையாளர்களுக்கு விமர்சனம் செய்யத் தெரியவில்லை என்று குற்றமும் சாட்டினார்.

இதே மிஷ்கின், பிசாசு படத்தின் பிரஸ்மீட்டில் மீடியாக்களை புகழ்ந்து தள்ளினார். அவர் இயக்கிய ‘ஓநாயும் ஆட்டுக்குடியும்’ படத்துக்கு அத்தனை மீடியாக்களும் சிறப்பாக விமர்சனம் எழுதியதாக குறிப்பிட்டார். மீடியாக்கள் பாராட்டியும், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஓடவில்லை என்று ஒப்புக்கொண்டார் மிஷ்கின்.

இந்த சம்பவம் நடந்த சில நாட்களின்தான் வேறு மேடையில் மீடியாக்களை திட்டினார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான மிஷ்கினின் ‘பிசாசு’ திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் இயக்குனர் மிஷ்கின் படு உற்சாகத்தில் இருக்கிறார். அதுமட்டுமல்ல இயக்குனர் மிஷ்கின் ஆரோக்கியமான விமர்சனங்களை தந்த அத்தனை மீடியா நண்பர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

 

Comments

comments