30-06-07-balachandarசென்னை: டைரக்டர் பாலசந்தரின் சாதனைகள் மறக்க முடியாதது என டைரக்டர் எஸ்.பி. முத்துராமன் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில், டைரக்டர் பாலசந்தரின் மறைவு நிச்சயம் அனைவருக்கும் மிகவும் வருத்தம் அளிக்கும் செய்தி. பாலசந்தர் மிகப்பெரிய சாதனைகளை செய்துள்ளார். அவரது சாதனைகள் என்றென்றும் அவரது பெயரை சொல்லிக் கொண்டே இருக்கும். என் போன்ற இயக்குனர்கள் அவரது பட்டறையில் இருந்து வந்தவர்கள் என்பதில் பெருமை. வித்தியாசமான திரைப்படங்கள், விழிப்புணர்வு படங்கள் படங்களை தந்தவர் பாலசந்தர். நாடகம், திரைப்படம் டி.வி.,யில் அவர் செய்த சாதனைகள் மறக்க முடியாதது. இவ்வாறு எஸ்.பி. முத்துராமன் தெரிவித்தார்.

Comments

comments