NT_1412041237010000002014ம் ஆண்டில் தமிழ் சினிமாவை பேய் பிடித்து ஆட்டுகிறது என்று சொன்னால் அது மிகையில்லை. இதுவரை வெளிவந்த படங்களில் 30 சதவிகித படங்கள் திகில் படங்கள்தான். திரும்பிய பக்கமெல்லாம் பேய் படங்கள்தான் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. வெற்றி பெற்ற இயக்குனர்கள், சுந்தர்.சி, மிஷ்கின் முதல் புதிதாக அறிமுகமான டீகே வரை எல்லோரும் பேய் படங்களாக எடுத்து தள்ளுகிறார்கள்.

இவற்றுக்கு சிகரம் வைத்த மாதிரி நாளை (டிச 5) 4 பேய் படங்கள் ரிலீசாகிறது. ஜோம்பி பெல்லி என்ற ஆங்கில படம் தவிர மற்ற மூன்று படங்களும் புதியவர்கள் இயக்கிய நேரடி தமிழ் படம். பிரபு யுவராஜ் இயக்கிய ர என்கிற படம் பேண்டசி வகை திரில்லர் படம். ஒரு வீட்டின் கதவுதான் இந்தப் படத்தில் பேய். இதனை விமானத்தில் பைலட்களாக பணியாற்றிவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். அஷ்ரம், அதிதி செங்கப்பா ஹீரோ ஹீரோயின்கள்.

1 பந்து 4 ரன் 1 விக்கெட் என்ற படத்தை புதுமுக இயக்குனர் வீரா இயக்கி இருக்கிறார். கிரிக்கெட் பைத்தியமான ஹீரோ, புதுமனைவியுடன் தனியாக இருக்கும்போது அவரை சந்தோஷப்படுத்தாமல் நள்ளிரவில் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் பார்க்கிறார். அந்த கிரிக்கெட்டிலிருந்து வருகிறது ஒரு பேய்.

13 பம் பக்கம் பார்க்க என்ற படத்தை புகழ்மணி என்பவர் இயக்கி உள்ளார். ஒரு மர்ம புத்தகத்தின் 13ம் பக்கத்தை ஒருவர் படித்து விட்டால் அவருக்கு பேய் டார்ச்சர் ஆரம்பித்து விடும். இப்படி இந்த படங்கள் நாளை முதல் பயமுறுத்த இருக்கிறது. இதில் எந்த பேய்க்கு மக்கள் பயப்பட போகிறார்கள். எந்த படம் மக்களுக்கு பயந்து தியேட்டரை விட்டு ஓடப்போகிறது என்பது வரும் திங்கட்கிழமை தெரிந்து விடும்.

இந்த படங்கள் தவிர பகடை பகடை, அழகிய பாண்டிபுரம், நாங்கெல்லாம் ஏடாகூடம், மனம் கொண்ட காதல், அப்பா வேணாம்ப்பா போன்ற சிறுபட்ஜெட் படங்கள் ரிலீசாகிறது. கன்னடத்தில் வெளியான அர்ஜுன் நடித்த பிரசாத் படமும், எக்சோடஸ் என்ற ஹாலிவுட் படம் டப் செய்யப்பட்டு நாளை வெளியாகிறது. மொத்தம் நாளை 11 படங்கள் ரிலீசாகிறது.

Comments

comments