unnamedநாகேஷ் …. ஒரு பழைய பேட்டியில் ….

“ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி, கட்டடம் உயர்ந்து கொண்டே போய் … அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.

கட்டடம் முடிந்து கிருகப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ , அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிருகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்…

மறைந்து கிடக்கிறதே , அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை… அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.”

கலகலப்பாய் சிரித்தபடியே இந்தக் கருத்தை நாகேஷ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்…
ஆனால்…கண்டிப்பாக இந்தக் கருத்தின் பின்னணியில் பல ரணங்கள் காரணமாக இருக்கும் என எனக்குத் தோன்றியது…!

அதில் ஒன்று..!

திருவிளையாடல் தருமியை யாராலுமே மறக்க முடியாது…!

அந்தக் காட்சியில் டப்பிங் பேச வந்த சிவாஜியே கூட……..நாகேஷ் நடிப்பைக் கண்டு அசந்து போய்… இயக்குனர் ஏ.பி.நாகராஜனிடம்…
. “இந்தப் படம் ஓடணும்னா தயவுசெய்து இந்தப் படத்தில் தருமி வேஷத்துல நாகேஷ் நடிச்சதுல ஒரு அடி கூட கட் பண்ணாம அப்படியே வைக்கணும்..
அப்பத்தான் இந்தப்படம் ஓடும்”..என்று சொன்னாராம்…

சிவாஜியின் இந்தப் பெருந்தன்மையை ,பல பேட்டிகளிலும் சொல்லி பெருமைப்பட்டிருக்கிறார் நாகேஷ்…!

சிவாஜி சொன்னபடியே படம் ஓஹோ என்று ஓடியிருக்கிறது…!
ஆனால்..அதன் பின் நடந்தது…
அதை நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது…!

திருவிளையாடல் படத்தின் நூறாவது நாள் விழாவுக்கு , நாகேஷுக்கு அழைப்பு கூட அனுப்பப்பட வில்லையாம் ..!

‎நாகேஷ்‬..”சாது மிரண்டால்” படத்தில் பாடியது சரிதான்…!

“நாடகமே இந்த உலகம்
ஆடுவதோ பொம்மலாட்டம்..”

 “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே..”

Comments

comments