ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியின் இரண்டாவது படமாக தீபாவளியன்று வெளிவந்த ‘கத்தி’ திரைப்படம் வெற்றிகரமாக 7வது வாரத்தைத் தொட்டிருக்கிறது. இன்னும், சிலநாட்களில் 50வது நாளைத் தொடவிருக்கிறது. இந்தவருடத்தில், இதுவரை வெளிவந்த படங்களிலேயே, அதிகப்படியான வசூலைக் குவித்துள்ள படமாக ‘கத்தி’ திரைப்படம் அமைந்துள்ளது. படம் வெளிவந்த 12 நாட்களுக்குள்ளேயே, 100 கோடிரூபாய் வசூலைக் கடந்த இத்திரைப்படம், தற்போது சுமாராக 125 கோடி ரூபாயைத் தாண்டியிருக்கும் என்கிறார்கள்.

Kaththi-motion-poster-610x330தீபாவளிக்குப் பிறகு வாராவாரம் எத்தனையோ திரைப்படங்கள் வெளிவந்தாலும் ‘கத்தி’ திரைப்படம் வெளியான பல திரையரங்குகளில் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சென்னையில் மட்டும் தற்போதும் சுமார் 20க்கும் மேற்பட்ட, திரையரங்குகளில் இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஐந்துவாரமுடிவில், சென்னையில் சுமார் 8 கோடி ரூபாய்க்கும் மேல் ‘கத்தி’ திரைப்படம் வசூல் செய்துள்ளதாம். விஜய்யின் மார்க்கெட் அந்தஸ்தை, இந்தப்படம் மேலும் உயர்த்தியிருக்கிறது. வெளியீட்டிற்கு முன்னால், பல தடைகள் இந்தப்படத்திற்கு வந்தாலும் அவற்றையெல்லாம், சுமூகமாகத் தீர்த்து படத்தை வெளியிட்டுவிட்டார்கள்.

கடந்தவாரம் கிடைத்த நீதிமன்றத் தீர்ப்பின் மூலம், தற்போது லைகா புரொடக்சன்ஸ் என்ற பெயரையும் விளம்பரத்தில் சேர்த்து விட்டார்கள். வெளியீட்டிற்குமுன், படத்திற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தவர்கள், நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு எதுவுமே சொல்லாமல் அமைதிகாத்து வருகிறார்கள். ‘கத்தி’ படத்தின் வசூலை, அடுத்தவாரம் வெளியாகும் ‘லிங்கா’ படம் முறியடிக்குமா? என்பதே தற்போதைய கேள்வி…

Comments

comments