obama_ap_2235933f_2237245gஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் காதல் கதை திரைப்படமாக உருவாகவுள்ளது. ஒபாமாவும், அவரது மனைவி மிச்செலும் காதலித்த கதை ‘சவுத் சைட் வித் யூ'(southside with you) என்ற பெயரில் தயாராகிறது.

1989-ஆம் ஆண்டு, முதன்முதலில் ஒபாமாவும், மிச்செலும் சந்தித்த தருணங்களை இத்திரைப்படம் விவரிக்கவுள்ளது. நடிகை டீகா சம்ப்டர், மிச்செல்லாக நடிக்கவுள்ளார். ஒபாமா பாத்திரத்தில் நடிப்பதற்கான நடிகர் தேர்வு நடைபெற்றுவருகிறது.

1989-ல் ஒரு சட்ட நிறுவனத்தில், மிச்செல்லும், ஒபாமாவும் சந்தித்தனர். அப்போதுதான் அவரைப் பார்த்து ஒபாமா காதல் கொண்டுள்ளார். “நாங்கள் முதன்முதலாக வெளியே சென்று வந்தோம். அந்த சந்திப்பு முடிவதற்கு முன்பாகவே நாங்கள் திருமணம் குறித்து முடிவெடுத்துவிட்டோம்” என மிச்செல் நினைவுகூர்ந்துள்ளார். 1992-ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இத்திரைப்படத்தை ரிச்சர் டேன் இயக்கவுள்ளார். சிகாகோவில் ஜூலை மாதம் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

Comments

comments