Justin-Prabhakaranபண்ணையாரும் பத்மினியும் படத்துக்காக கவிஞர் வாலி இரண்டு பாடல்கள எழுதினார். நான் போட்டுக்கொடுத்த டியூனை கேட்டதுமே, இந்த டியூன் ஹிட்டாகும் என்று அவர் சொன்னார். ஆக, நான் இசையமைத்த முதல் படத்திலேயே கவிஞர் வாலியின் பாடல் இடம்பெற்றதை பெரிய பாக்கியமாக கருதுகிறேன் என்கிறார் ஜஸ்டின் பிரபாகரன்.

 

அவருடன் ஒரு சந்திப்பு…

 

இசையில் ஈடுபாடு ஏற்பட்டது எப்படி?

என் தந்தை மதுரையில் உள்ள ஒரு சர்ச்சில் வேலை பார்த்தார். அப்போது அங்குள்ள அமெரிக்கன் காலேஜில் நான் படித்து வந்தேன். அப்பாவுடன் சேர்ந்து இரவு சர்ச்சில்தான் தூங்குவேன. அப்போது அங்கு இருக்கும் பியானோவை வாசிப்பேன். எனக்குள்ளும் இசை மீது ஈடுபாடு இருந்ததால், அநத பியானோவை அடிக்கடி வாசித்து என்னை இசைக்கலைஞனாக வளர்த்துக்கொண்டேன். அதன்பிறகு மதுரையில் உள்ள ஒரு ரெக்கார்ட்டிங் ஸ்டூடியோவில ஒர்க் பண்ணினேன். அதன்பிறகு எனக்கு கீபோர்டு பிளேயராகும் ஆசை ஏறபட்டது. ஆனா கீபோர்டு பிளேயர் ஆகணும்னா சவுண்ட் இஞ்சினியரிங் கத்துக்கணும்னு சொன்னாங்க.அதுக்கு அப்புறம் சென்னை வந்து பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சவுண்ட் இஞ்சினியரிங் 3 வருசம் படிச்சேன். அப்போ கீபோர்டு பிளேயரா போகணும்னா இனஸ்ட்ரூமென்ட் வாங்கவே 2 லட்சம் தேவைப்பட்டது. அது முடியாததுனால, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் ஸ்டூடியோவில சவுண்டு இஞ்ஜினியராக வேலைக்கு சேர்ந்தேன். அவருகிட்ட ஒரு மூணு வருசமா ஒர்க் பண்ணிக்கிட்டே, சில குறும்படங்களுக்கு இசையமைச்சேன். அப்ப தான் அருண்குமார் இயக்கிய அஞ்சு ரூபா, பண்ணையாரும் பத்மினியும் உள்பட 5 குறும்படங்களுக்கு இசையமைச்சேன். அதன்பிறகு அவர் பணணையாரும் பத்மினியும் படத்தை விஜயசேதுபதியை வைத்து இயக்கும்போது அநத டீமோட அப்படியே நானும் வந்தேன். அந்த படத்துக்கு முதன்முறையாக இசையமைச்சேன்.

பண்ணையாரும் பத்மினியும் படத்தில் உங்கள் இசைக்கு எந்த மாதிரியான ரெஸ்பான்ஸ் கிடைத்தது?

எல்லாருமே ரொம்ப பாராட்டினாங்க. அந்த படத்துல நான் லைவ் இன்ஸ்ட்ரூமென்ட்தான் போட்டேன். அதுக்கு அந்த படத்தோடு தயாரிப்பாளர், இயக்குனர் அனைவருமே எனககு ஒத்துழைப்பு கொடுத்தாங்க. அதனால்தான் முதல் படத்திலேயே மத்தவங்களோட பாராட்டு பெறும் அளவுக்கு என்னால் வித்தியாசமா இசையமைக்க முடிஞ்சது. இதுக்கு பண்ணையாரும் பத்மினியும் யூனிட்டுக்குத்தான் நான் நன்றி சொல்லனும்.

விஜயசேதுபதி உங்கள் இசையைப்பற்றி என்ன கருத்து சொன்னார்?

படத்தோட கதை மட்டுமிலலாம இசையிலயும் அதிக ஈடுபாடு காட்டக்கூடியவர் விஜயசேதுபதி. அதனால் படத்துக்கு நான் இசையமைத்துக்கொண்டிருக்கும்போது, ரொம்ப ஆர்வம் காட்டினார். ஒவ்வொரு விசயத்தையும் பற்றி கேட்டு தெரிந்து கொண்டார். அதோடு நல்ல அவுட்புட் வருவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும அவரும் செய்தார். அந்தவகையில், படத்தின் ஹீரோ என்பதைவிட எனக்கு ஒரு நல்ல அண்ணனாக இருந்தார் விஜயசேதுபதி.

கவிஞர் வாலியுடன் பணியாற்றிய அனுபவம் எப்படி?

பண்ணையாரும் பத்மினியும் படத்துக்காக கவிஞர் வாலி அவர்கள் இரண்டு பாடல்கள் எழுதிக்கொடுத்தார். நான் போட்டுக்கொடுத்த டியூனுக்கு பாடல் எழுதும்போது இந்த டியூன் ஹிட்டாகும் என்று அப்போதே அவர் சொன்னார். அநத படத்தில் எல்லா பாடல்களையும் வாலி சார்தான் எழுதுவதாக இருந்தது. ஆனால், இரண்டு பாடல்கள் எழுதி கொடுத்த சமயம் அவர் இறந்து விட்டதால் மீதி பாடல்களை வேறு பாடலாசிரியர்கள் எழுதினார்கள். ஆக, வாலி சார் நான் இசையமைத்த முதல் படத்திலேயே பாடல் எழுதியதை பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.

சமீபகாலமாய் அதிரடி இசையின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறதே? இது ரசனையின் மாற்றமா?

சில பாடல்கள் ஹிட்டாவதால் அந்த மாதிரியான பாடல்கள் அதிகமாக வருகிறது. அதேசமயம், மெலோடி பாடல்களுக்குத்தான் எப்போதுமே லாங் லைப் உண்டு. என்னதான் குததுப்பாட்டாக இருந்தாலும அதற்குள் மெலோடி இருந்தால் அந்த பாட்டுக்கு லாங் லைப் இருக்கும். அது இல்லாத பாடல்கள் அப்போதைக்கு ஹிட்டானாலும உடனே காணாமல் போய்விடுகிறது. காரணம் டெக்னாலஜி அதை மறைத்து விடுகிறது.

மேலும், இளையராஜாதான் இசைக்கேற்ப டெக்னாலஜியை சரியாக பயன்படுத்தி வந்தார். ஆனால் இப்போது டெக்னாலஜிக்கு பின்னாடி இசை ஓடிக்கொண்டிருககிறது.

நீங்கள் எந்த மாதிரி இசையை ரசிப்பீர்கள்?

நான் எப்போதுமே இளையராஜா ரசிகன்தான். அவரது பாடல்களைக்கேட்டுதான் இசையை கற்றுக்கொண்டேன். அவரது சின்னத்தம்பி படத்தின் பாடல்கள், குணாவில் கண்மணி அன்போடு காதல் நான் எழுதும் கடிதமே, ஹேராமில் நீ பார்த்த பார்வை, தளபதி பட பாடல்கள் என ஒரு பெரிய பட்டியலே உள்ளது.

பாடல்களின் லைப் டைம் குறைந்து வருவது ஏன்?

லைவ் இன்ஸ்ருமென்டை பயன்படுத்துவது குறைந்து விட்டதுதான் இதற்கு காரணம் என்று நினைககிறேன். எலக்ட்ரானிக் இசைக்கருவிகளை தவிர்த்து லைவான இசைக்கருவிகளை பயன்படுத்தினால் இசையின் லைப்டைம் அதிகரிக்கும். நல்ல இசையை நல்ல கருவிகள் மூலம் கொண்டு வரும்போதுதான் இசையின் ஆயுட்காலம் அதிகமாகும். அதனால்தான் நான் கீபோர்டு போன்ற எலக்ட்ரானிக் இசைக்கருவிகளை பயன்படுத்துவதை குறைத்து வயலின், செனாய், வீணை என இசைக்கருவிகளை தேவைக்கேற்ப பயன்படுத்தி வருகிறேன்.

இப்போது எந்த படத்துக்கு இசையமைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?

பண்ணையாரும் பத்மினியும் படத்திற்கு பிறகு இப்போது அதே விஜயசேதுபதி நடிக்கும் ஆரஞ்சு மிட்டாய் படத்துக்கு இசையமைத்துக்கொண்டிருக்கிறேன். இநத படத்துக்கு விஜயசேதுபதிதான் தயாரிப்பாளர். அதனால், அவரும், இயக்குனரும் சேர்ந்தே படம் முழுக்க லைவ் இசைக்கருவிகளைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லி விட்டனர். அதனால் என் விருப்பப்படியே அதிக ஈடுபாட்டுடன் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். பண்ணையாரும் பத்மினியும் படததில் இருந்து இந்த படத்தில் வித்தியாசமான கதைக்களம். அதனால் எனது இசையும ஒரே மாதிரி இல்லாமல் இந்த படத்தில் வித்தியாசமாக வெளிப்பட்டு வருகிறது.

பாடல்கள் ஹிட்டாக இசை மட்டுமே போதுமானதா?

ஒரு பாடல் ஹிட்டாவதற்கு இசை மட்டுமினறி பாடல் வரிகளும் முக்கியம். டியூனுக்கு ஏற்ப அந்த வரிகளும் சரியாக பொருந்தி விட்டால் அந்த பாடல் ஹிட்டாகி விடும் அந்த வகையில், இசை 50 சதவிகிதம் என்றால், வரிகளும் 50 சதவிகிதம் இருக்க வேண்டும். இரண்டும் சரியாக இருந்தால் அநத பாடல் ஹிட்டாகி விடும்.

முன்னணி ஹீரோக்களின் படப்பாடல்கள் மட்டுமே பெரிய அளவில் ஹிட்டாகி வருகிறதே?

காரணம், முன்னணி நடிகர்களின் ஆடியோ ரிலீசாகிறது என்றால் ரசிகர்கள் அந்த பாடல் கேசட்டை கேட்டு வாங்குகிறார்கள். அதோடு, பெரிய கம்பெனி படமாக இருக்கும்போது பப்ளிசிட்டியும் பெரிய அளவில் இருக்கிறது. அதனால்தான் வந்த வேகத்திலேயே பாடல்கள் ஹிட்டாகின்றன. இருப்பினும் அப்படி வரும் பாடல்கள் தரமாக இருந்தால் மட்டுமே நீண்டநாள் நிலைக்கும். இல்லையேல், படம் ஓடிமுடித்ததும் கூடவே அந்த பாடலும் மறைந்து போய்விடும்.

 

இசையமைப்பாளர்களின் படையெடுப்பு அதிகரித்து விட்டதே. இது நல்ல விசயமா?

இது பெரிய சேலஞ்சிங்கா தான் இருக்கு. மேலும், மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட இசையை கொடுக்க வேண்டும் என்ற மெனக்கெடல் அதிகரிக்கிறது. இதன்காரணமாக எல்லா பாட்டும் நல்ல பாட்டாக வரும். ஆக ரசிகர்களுக்கு ஒரே மாதிரியான பாடல்களாக இல்லாமல் மாறுபட்ட பாடல்களாக நிறைய கிடைக்கும்.

அடுத்து என்னென்ன படங்களுககு இசையமைக்கிறீர்கள்?

ஆரஞ்சு மிட்டாயைத் தொடர்ந்து சுசீந்திரன் உதவியாளர் இயக்கும் படம் மட்டுமின்றி ஒரு மலையாள படத்துக்கும் தற்போது இசையமைத்து வருகிறேன. தமிழை விட அங்குள்ள டைரக்டர்கள் மெலோடியான பாடல்களையே அதிகமாக கேட்கிறார்கள. மேலும் என்னைப்பொறுத்தவரை மெலோடி, குத்துப்பாட்டு என்று காலத்துக்கு தகுந்த மாதிரியான பாடல்களை கொடுத்தாலும், குத்துப்பாடல்களிலும் மெலோடியை கலந்தே கொடுப்பேன். இளையராஜா சாரெல்லாம் குத்துப்பாடல்களிலும் மெலோடி வைத்திருப்பார். அதனாலதான் அவரது பாடல்கள் இன்றைக்கும் கேட்க இனிமையாக உள்ளது. அதனால் அவரது பாணியில்நான் இசையமைக்கும் அதிரடியான பாடல்களிலும் மெலோடி கண்டிப்பாக இருக்கும் என்கிறார் ஜஸ்டின் பிரபாகரன்.

Comments

comments