Devayani's_picture_2013-08-04_12-15காதல் கோட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குடும்ப குத்துவிளக்காக நடித்து புகழ்பெற்றவர் தேவயானி. சினிமாவில் மார்கெட் குறைந்ததும் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார் கோலங்கள் அபியாக அங்கும் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். சின்னத்தரை வரலாற்றில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய முதல் நடிகையாக திகழ்ந்தார். ஒரு கட்டத்தில் சின்னத்திரையை விட்டு விலகினார்.

இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்ட தேவயானிக்கு இரண்டு பெண் குழந்தைகள். தற்போது அசோக் நகரில் ரிக்கார்டிங் ஸ்டூடியோ ஒன்றை கட்டி நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் சென்னை அண்ணா சாலையில் உள்ள சர்ச் பார்க் கான்வென்ட் பள்ளியில் டீச்சராக வேலைக்கு போய்க்கொண்டிருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: இப்பவும் நிறைய சீரியல் வாய்ப்புகளும், சினிமா வாய்ப்புகளும் வருகிறது. ஒரே மாதிரியாக நடிப்பது பிடிக்கவில்லை. அதோடு வாழ்நாள் முழுவதையும் பணம் சம்பாதிப்பதற்காகவே செலவிட முடியாது. ஏதாவது வித்தியாசமான செய்ய வேண்டும் என்று நினைத்தேன். மற்றவங்களுக்கு உதவுற ஒரு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டேன். சின்ன வயதிலிருந்தே எனக்கு பிடிச்சது டீச்சர் வேலை. அதனால் ஒரு டீச்சர் டிரைய்னிங் கோர்ஸ் படிச்சேன். அந்த கோர்சை முடிக்கிறது ஏதாவது ஒரு ஸ்கூல்ல ஆறு மாசம் ஒர்க் பண்ணி ப்ராஜக்ட் பண்ணனும்.

என் பிள்ளைகள் படிக்கிற சர்ச் பார்க் கான்வென்ட்டை செலக்ட் பண்ணினேன். அவுங்களும் சந்தோஷமா ஒத்துக்கிட்டாங்க. ப்ராஜக்டை முடிச்சேன். அதற்கு பிறகு அந்த ஸ்கூல்ல வேலை பார்த்த ஒரு டீச்சருக்கு கல்யாணம், அவுங்க வேலையை பண்ண முடியுமான்னு கேட்டாங்க. சந்தோஷமா ஒத்துக்கிட்டேன். என் கண்காணிப்புல 45 குழந்தைகள் படிக்கிறாங்க. தினமும் அவுங்க முகத்தை பார்க்குறப்போ புதுசா பொறந்த மாதிரி இருக்கு. சம்பளமெல்லாம் ஒரு விஷயமே இல்லை. இதுல சந்தோஷமும், நிம்மதியும் நிறைஞ்சிருக்கு என்கிறார் தேவயானி.

Comments

comments