Vijayakanth-Son-Shanmuga-Pandians-First-Movie-Sagaptham-Launch-12சென்னை : தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த அக்டோபர் 30ம் தேதி திடீரென்று மலேசியா புறப்பட்டு சென்றார். அவருடன் மனைவி பிரேமலதா, மகன் சண்முகபாண்டியன் ஆகியோரும் சென்றனர். சண்முகபாண்டியன் ஹீரோவாக நடிக்கும் Ôசகாப்தம்Õ படத்திற்கான ஷூட்டிங்கிற்காக மலேசியா சென்றது தெரிந்தது. இதில் விஜயகாந்தும் நடிக்கிறார். இந்நிலையில் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் நேற்று இரவு 11.50 மணிக்கு கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் தேமுதிக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்றனர்.

பின்னர் நிருபர்களுக்கு விஜயகாந்த் அளித்த பேட்டி:உங்களுடைய பட ஷூட்டிங் முடிந்துவிட்டதா, படம் எப்போது வெளியாகும்?அதெல்லாம் எனக்கு தெரியாது. படத்தின் தயாரிப்பாளருக்கு தான் தெரியும். பொங்கலுக்கு வருமா அதன் பிறகு வருமா என்பதை அவரைதான் கேட்க வேண்டும்.நாளை மறுநாள் தமிழக சட்ட பேரவை கூடுகிறது. எதிர்க்கட்சி தலைவராகிய நீங்கள் இந்த கூட்ட தொடரில் கலந்து கொள்வீர்களா? என்னென்ன பிரச்னைகளை பற்றியெல்லாம் சட்ட பேரவையில் விவாதிக்க இருக்கிறீர்கள்?இப்போதுதான் தமிழ்நாட்டிற்குள்ளே வருகிறேன். விமானத்தை விட்டு இறங்கி சில நிமிடங்கள் தான் ஆகிறது. அதற்குள்ளே நீங்க என்கிட்ட இந்த கேள்வியை கேட்கிறீர்களே. தமிழ்நாட்டில் என்ன நடந்தது.

என்ன நடந்துகொண்டு இருக்கிறது என எதுவும் எனக்கு தெரியாது. நான் தமிழ் பத்திரிகைகளையும் டிவி சேனல்களையும் பார்த்து ஒரு மாதத்திற்கு மேலாகிறது. நீங்கள் எல்லாம் ஏற்கனவே வந்து உங்களுக்குள்ளே பேசி வைத்து கொண்டு என்னிடம் இந்த கேள்வியை கேட்கிறீர்கள். நான் இனிமேல்தான் பத்திரிகைகளை படிக்க வேண்டும். என்ன நடந்தது என¢பதை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு நானும் சிந்தித்து யோசித்து முடிவு எடுக்க வேண்டும். நேரம் ஆகிவிட்டது இன்றைக்கு இது போதும். நீங்கள் (நிருபர்கள்) புறப்படுங்க. இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

Comments

comments