dhanபிரமாண்ட பட்ஜெட்டில் படம் தயாரித்து வெளியிடுவதை விட, பிரமாதமான கதைகளை தயாரித்து வெளியிட்டால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்ற தொழில் ரகசியத்தை தெரிந்து வைத்திருக்கிறார் தனுஷ். அதன்காரணமாகவே தான் தயாரிக்கும் எந்த படமாக இருந்தாலும் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறாராம் அவர்.

மேலும், தன்னிடம் கதை சொல்ல வருபவர்கள், இத்தனை கோடி பட்ஜெட்டில் ஒரு கதை வைத்திருக்கிறேன் கேட்கிறீர்களா? என்று கேட்டால், முதலில் கதையை சொல்லுங்கள். அதை எத்தனை கோடியில் தயாரிக்கலாம் என்பதை நான் சொல்கிறேன் என்கிறாராம். அதோடு, தான் நடித்த லோ பட்ஜெட் படங்களை குறிப்பிட்டு, நான் நடித்த பிரமாண்ட படங்களை விட இந்த லோ பட்ஜெட் படங்கள்தான் வெற்றி பெற்றன. காரணம், அந்த படங்களின் கதைதான். அதனால் எப்போதுமே நல்ல கதைதான் ஜெயிக்கும். அதனால் எனக்கு பட்ஜெட்டை விட கதைதான் முக்கியம் என்கிறாராம். முககியமாக, வேலையில்லா பட்டதாரி படத்தை இயக்கிய கேமராமேன் வேல்ராஜ்கூட, உங்களுக்காக ஒரு கதை வைத்திருக்கிறேன். அதுவும் செலவே இல்லாத கதை என்று சொன்னதையடுத்துதான் அவரிடம் கதையே கேட்டாராம் தனுஷ்.

அதனால் தனுஷின் இந்த மனநிலையை தெரிந்து கொண்ட கோலிவுட் டைரக்டர்கள், அவரிடம் கதை சொல்லச்செல்லும்போது, பட்ஜெட், நடிகர் நடிகைகள் பற்றிய பட்டியலை சொல்வதே இல்லையாம். கதையை மட்டுமே சொல்கிறார்களாம். கதை தனுசுக்கு ஓகே என்றால் மட்டுமே பின்னர் மற்ற விசயங்களைப்பற்றி அவரிடம் டிஸ்கஸ் செய்கிறார்களாம்.

Comments

comments