சென்னை 12-வது சர்வதேச பட விழாவில் செவ்வாய்க்கிழமை ரஷ்ய கலாச்சார மையம் அரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை:

காலை 10 மணி

Persona nob grata / Krzysztof Zanussi / Poland / 2005 / 110′

persona_2253281fஉருகுவே நாட்டுக்கான போலந்து தூதர் விக்டர். 2005-ல் இவரது மனைவி ஹெலனா இறந்துவிடுகிறார். அவளது இறுதிச் சடங்குக்கு வரும் விக்டர், அங்கு ரஷ்யரான தனது பழைய நண்பன் ஓலக் நிற்பதை கவனிக்கிறான். அப்போது விக்டர் மனதில் சந்தேகம் எழுகிறது. ஹெலனாவுக்கு, ஓலக்குக்கும் தொடர்பு இருந்ததா என்பதை விக்டர் கண்டறிய முற்படுகிறார்.

ஓலக்கிற்கு உருகுவே செல்ல வேண்டியிருந்ததால், அடுத்த சந்திப்பின்போது விக்டரிடம் அனைத்தையும் சொல்வதாக கூறுகிறார். இதற்கிடையில், விக்டருக்கும் தூதரக அதிகாரி ஒருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. அதன் பின்னர் எழும் பிரச்சினைகளை விக்டர் எதிர்கொள்வதை விவரிக்கிறது திரைக்கதை.

மதியம் 12 மணி

Two Step / Alex R.Johnson / USA / 2014 / 105′

two_step_2253278a

ஜேம்ஸ் தனது குடும்பத்தில் எஞ்சிய கிராம்ஸை சந்திக்க வருகிறார். ஆனால் இவரும் திடீரென உயிரிழக்கிறார். இந்நிலையில் கிராம்ஸின் அண்டை வீட்டுக்காரரான நடன ஆசிரியர் டாட் என்பவருடன் பழகி ஆறுதல் தேடுகிறார். கிராம்ஸின் விவகாரங்களை முடித்து வைக்கும் ஜேம்ஸுக்கு அவளது வாழ்வு ஏதோ ஒரு சூழ்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது மெதுவே தெரியவருகிறது.

இதில் ஜேம்ஸ் என்ற பெயரிலேயே ஒருவர் கிராம்சை ஏமாற்றி பணம் பறித்ததும் தெரியவருகிறது. அவனைத் தேடி ஜேம்ஸ் போகும் முன்னரே வெப் என்ற அந்த நயவஞ்சகன் ஜேம்ஸ் வீட்டிற்கு வந்து நிற்கிறான். பணம் அவனுக்கு எப்படியும் தேவை, அதற்காகத்தான் வந்திருக்கிறான். இனி என்ன?

மதியம் 2 மணி

Salim | Dir.: R.K.Suresh | Tamil |2014|149’| TC

salim_2253280a

ஒரு டாக்டர், கார்ப்பரேட் மருத்துவமனையில் பணிபுரிகிறான். மருத்துவத் தொழிலை உன்னதமான சேவையாகக் கருதும் அவன், ஏழைகளுக்குக் குறைந்த விலை மருந்துகளை எழுதிக் கொடுப்பது, அனாவசிய மருத்துகளைப் பரிந்துரை செய்யாமல் இருப்பது என்று செயல்படுகிறான்.பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுக் குற்றுயிராகக் கிடக்கும் ஒரு பெண்ணைத் தற்செயலாகப் பார்க்கும் சலீம், அவளுக்கு மருத்துவம் செய்கிறான். ஆனால் அவளுக்கு அநீதி இழைத்தவர்களை அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

சலீமின் போக்கு தங்களுக்கு ஒத்துவராததால் மருத்துவமனை நிர்வாகம் அவனை வெளியே அனுப்புகிறது. காதலியும் அவனைப் புறக்கணிக்கிறாள். அவமானமும் புறக்கணிப்பும் வெறுப்பின் உச்சத்துக்கு அவனை இட்டுச் செல்கின்றன. ஒரு கட்டத்தில் அழுத்தம் தாங்காமல் வெடிக்கிறான். அந்த வெடிப்பு அவனை எங்கே இட்டுச் செல்கிறது என்பதே மீதிக் கதை.

மாலை 5 மணி

Sathuranga Vettai | Dir.:H. Vinoth | Tamil|2014|125’| TC

sathuranga_vettai_2253279a

ஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு, ரைஸ் புல்லிங் என்று பல விதமான வடிவங்களில் மோசடிகள் கடைபரப்பப்பட்டு வருகின்றன. எவ்வளவுதான் ஊடகங்கள் இவற்றை அம்பலப்படுத்தினாலும் மக்கள் தொடர்ந்து ஏமாந்துதான் வருகிறார்கள். இந்த மோசடிகளின் தன்மைகளை அவற்றின் செயல்முறைகளோடு அம்பலப்படுத்தும் படம்தான் ‘சதுரங்க வேட்டை’.

மாலை 7.30 மணி

BackRoads/Australia/Phillip Noyce(Retro)/60’/1977

backroad_2253282aஆஸ்திரேலியாவில் நிலவும் கருப்பின வெள்ளையினத்தவர்களுக்கிடையே கருத்துவேறுபாட்டை களைய முற்படும் முயற்சி இது. கார் பயணத்தின் வழியே இன வேற்றுமைகளின் பிரச்சினைகளை ஒரு பேலன்ஸ் ஸ்டேட்மென்ட்டைப்போல தருகிறது.

இரண்டு வழிப்போக்கர்கள் ஜாக் – ஆங்கிலேயர் முன்கோபி, உரசல் போக்கில் யாரையும் மோதிப்பார்ப்பவன். பூர்வகுடிகளைப் பற்றி வஞ்சனையும் இகழ்ச்சியும் கொண்டவன். கெர்ரி – பூர்வகுடி பொறுமைசாலி, அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாதவன்.

புதிய தெற்கு வேல்ஸ் பகுதியிலிருந்து ஒரு காரைத் திருடிக்கொண்டு செம்மண் பாலைவனத்தின்வழியே செல்கிறார்கள். இந்த கார் திருட்டிலிருந்து தப்பிவித்துவிட மட்டுமே கவனம் செலுத்தி, வழியில் கெர்ரியின் மாமா வழிமறிக்க அவரையும் ஏற்றிக்கொண்டு செல்கிறார்கள். வழியில் எங்கிருந்தோ தப்பித்துவந்த ஒரு இளம்பெண் உதவிகேட்க அவளையும் ஏற்றிக்கொண்டு கார் செல்கிறது. அப்போது இருவருக்கும் நடைபெறும் உரையாடல்வழியே ஆஸ்திரேலிய பூர்வகுடிகளின் கலாச்சாரம், வாழ்க்கை முதலியவற்றை உணர்வுபூர்வமாக இப்படம் அணுகியுள்ளது.

Comments

comments