சென்னை 12-வது சர்வதேச பட விழாவில் ஞாயிற்றுக்கிழமை காஸினோ திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை.

காலை 10 மணி

Now or never/France/Serge Frydman/95’/2014

1-1now_or_never_2251267fஅழகிய நந்தவனம் போன்ற தோட்டம் சூழ அமைந்துள்ள வீட்டுக்கு வந்த உடனேயே பிரச்சினை ஆரம்பித்துவிடுகிறது. கணவன் புதிய வங்கியில் வேலை கிடைக்க வேண்டுமானால் இந்த வீட்டை உடனடியாக காலி செய்ய வேண்டுமாம். அதுமட்டுமின்றி வேறு வீடு பார்க்க பணம் கட்ட வேண்டும். பணத்திற்கு எங்கு போவது?

குடும்பத்தை நல்லபடியாக கவனித்துக்கொள்ளும் குடும்பத் தலைவி ஒரு முடிவெடுக்கிறாள். எல்லோரும் உறங்கிய பிறகு வீட்டைவிட்டு வெளியே புறப்படுகிறாள். நகரில் உள்ள ஏடிஎம் மையத்தில் ஒவ்வொரு நள்ளிரவில்தான் வந்து பணம் போடுவார்கள். அதைக் கவனித்து அதை உடைத்து அப்பணத்தை எடுத்துவர செல்கிறாள். சிசிடிவி கேமரா எங்குள்ளது அது அறியாமல் திருடுவது எப்படி என்றெல்லாம் அவள் திட்டமிடுகிறாள்.

ஒவ்வொரு நாளும் இப்படி சென்று பணத்தை திருடி வருகிறாள். ஒரு நாள் எதிர்பாராமல் இவள் வழியில் ஒரு இளைஞன் குறுக்கிடுகிறான். அவனும் ஏடிஎம் திருடன்தான். அவனிடமிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவந்துவிடுகிறாள்… ஆனால் குடும்பத்தில் கணவன் இவளை சந்தேகப்படுவதோடு தினம் தினம் எங்கு போகிறாய் என்று கேட்கிறான். இவள் சொல்வதை அவன் ஏற்றுக்கொள்ளத் தயராகஇல்லை. அங்கு உருவான கேள்விகளை இவளால் எதிர்கொள்ளமுடியாமல் திணறுகிறாள்.

மதியம் 12 மணி

The Gambler/Lithuania/Ignas Jonynas/109’/2013

the_gambler_2251263a

யூரியா வின்சென்ட்டாஸ் என்பவன் இரண்டு விதமான வாழ்க்கையை வாழ்கிறான். ஒன்று வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கும் அவனது பாராமெடிக் கம்பெனி. இன்னொன்று மோசமான சூதாட்டம். அவன் தனது கடன்களைத் திரும்பப்பெற தீவிரவாதத்தில் ஈடுபடுகிறான். மேலும் தான் செய்யும் தொழிலும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுகிறான். இதனால் காதல், வாழ்க்கை, மரணம் எல்லாமும் அதிர்வுகளை உண்டாக்கிட அதிலிருந்து கடைசியாக அவன் வெளியேற முடிவெடுக்கிறான்.

மதியம் 3 மணி

Fish and Cat/Iran/Shahram mokri /134’/2013

fish_and_cat_2251265a

காடும் மலையும் சூழ்ந்த ரம்மியமான காஸ்பியன் பிரதேசத்திற்கு மாணவர்கள் சிலர் ஒரு பயணம் செய்து அங்கு கூடாரங்கள் அமைத்து முகாமிடுகிறார்கள். அங்கு அவர்கள் பட்டங்களைப் பறக்க விடுவதுபோன்ற செயல்களின்மூலம் பொழுதை களிப்புடன் அனுபவிக்கிறார்கள். அவர்களது முகாமிற்கு அருகிலேயே சிறு குடிசையில் சமையல்காரர்கள் தங்கியிருக்கிறார்கள்.

அருகிலேயே அவர்கள் பணியாற்றும் உணவு விடுதியும் உள்ளது. அங்கு ஏரிக்கரையில் தனியே காட்டுக்குள் நுழைந்து ஒரு மரத்தினடியில் வெயிலில் புத்தகம் படித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை ஒரு மனிதன் ரகசியமாக பின்தொடர்ந்து வந்து அவளைத் தாக்க முற்படுகிறான். அதன்பின் சக மாணவர்களின் உணர்வுகள் என்னவாக இருந்ததை உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டது. 13வது லிஸ்பன் ஈஸ்டோரில் திரைப்படவிழாவில் சிறந்த படத்திற்கான விருதுபெற்றது.

மாலை 5 மணி

Behaviour /Cuba/Mrsic Croatia/108’/2014

behaviour_2251266aவெவ்வேறு பிரச்சினைகள், பலவீனங்கள், சிக்கல்களை பின்னணியாகக் கொண்ட, மதிப்பற்ற குடும்பங்களிலிருந்து வரும் குழந்தைகளுக்கு வயதான கார்மெலா டீச்சரை மிகமிகப் பிடிக்கும். காரணம் அக்குழந்தைகளின் குறைகளை அவர் பெரிதுபடுத்தமாட்டார். அதுமட்டுமின்றி அக்குழந்தைகள் ஏதாவது தவறு செய்துவிட்டார்கள் என்று புகார் வந்தால் உடனே அதற்கு சிரமேற்கொண்டு தண்டனைகளைத் தந்துவிடமாட்டார்.

மேலும், தண்டனைகள்மீது கார்மெலா டீச்சருக்கு நம்பிக்கையும் இல்லை. அவர் உடல்நிலை திடீரென்று மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது இவருக்கு பதிலாக வேறு ஒரு ஆசிரியை பணியமர்த்தப்பட, அவர் சாலா என்கிற சிறுவன்மீது நடத்தை சரியில்லை என்று முத்திரை குத்திவிடுகிறார். அதற்காக அச்சிறுவனுக்கு ‘மறு கல்வி’ என்கிற மாபெரும் தண்டனையைப் பரிந்துரைத்துவிடுகிறார்.

நல்லவேளையாக மருத்துவமனையிலிருந்து கார்மெலா டீச்சர் வந்ததும் முதல்வேலையாக அச்சிறுவன்மீது விதிக்கப்பட்ட தண்டனையிலிருந்து அவனை விடுவிக்கிறார். இயல்பான அவனை மாணவனாகவே அங்கீகரித்து அவனுடைய கல்வி பாதிப்படையாமல் இருக்க வகை செய்கிறார். இவரது இச் செயல்மீது பள்ளிநிர்வாகம் வெகுண்டெழுகிறது. கார்மெலா டீச்சரை கட்டாய ஓய்வுகொடுத்து அனுப்பிவிடுகிறது. இரண்டு இளம்குழந்தைகளுக்கு இடையிலான நேசம் இப்படத்தில் இழையோடும் இன்னொரு முக்கிய அம்சமாகும்.

இப்படம் பல விருதுகளை வாரிக் குவித்தது. மலாக்கா ஸ்பானிஷ் திரைப்படவிழாவில் லத்தீன்அமெரிக்க படங்களுக்கான பிரிவில் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை, பார்வையாளர் சிறப்பு விருதுகள். நியூயார்க்கில் நடைபெற்ற ஹவானா திரைப்படவிழாவில் சிறந்த நடிகை மற்றும் சிறந்த படத்திற்கான ஹவானா ஸ்டார் பிரைஸ். லிமா திரைவிழாவில் பார்வையாளர் விருது.

ப்ராசில்லா உலகப்படவிழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருது. ஆஸ்கர் அகாதமி விருதுக்காக சிறந்த வெளிநாட்டு படப் பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டது.

மாலை 7.15 மணி

Insecure/France/Marianne Tardieu/83’/2014

insecure_2251264a

ப்ளூ இஸ் த வார்மெஸ்ட் கலர் படத்தின் கதாநாயகி அடிலே எக்ஸார்சோ பௌலாஸ் கதாநாயகியாக நடித்துள்ள படம். ஆனால் அவரது முந்தைய படம் மாதிரியான கதையல்ல.

பிரான்ஸ்ஸின் மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து பாரீஸில் வந்து தங்கி நர்ஸிங் படிப்பவன் ஷெரீப். கல்வியைத் தொடர போதிய பணம் கிடைக்காததால் ஷாப்பிங் மால் ஒன்றில் செக்ரியூட்டி கார்டு வேலைக்குப் போக முடிவெடுக்கிறான்.

அவன் தங்கியுள்ள பகுதியிலிருந்து பேருந்து பிடித்து வேலைக்குச் செல்வது அவனது வழக்கம். அத்தகைய நாட்களில்தான் தன் தோழிகளோடு படிக்கப்போகும் நாயகி அடிலேவைச் சந்திக்கிறான். அவள்மீது மனம் அலைபாய்கிறது. அவளும் இவன் வேலை செய்யும் ஷாப்பிங் மாலுக்கு வருவாள். இவர்கள் காதல் தொடரும்போது அவன் தங்கியிருந்த இடத்தைச் சேர்ந்த சில விடலைகள் இவனுக்கு ஓயாது தொல்லை கொடுக்க ஆரம்பிக்கின்றனர்.

அவன் வேலைசெய்யும் ஷாப்பிங் மாலுக்கே வந்து வெளியில் நிற்கும் அவனை கேலியும் கிண்டலும் செய்கின்றனர். மிகவும் நிதானப் போக்கை கடைபிடிக்கிறான் ஷெரீப். என்றாலும் இந்தப் போக்கை கட்டுப்படுத்த என்ன செய்வது என யோசிக்கிறான். அதற்கு ஒரு திட்டமும் கிடைக்கிறது. இப்படம் சைடுபாஸ் செக்ஷனில் கேன்ஸில் இந்த திரையிடப்பட்டது.

Comments

comments