சென்னை 12-வது சர்வதேச பட விழாவில் வியாழக்கிழமை ஐநாக்ஸ் திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை. மாலை 6.15 மணிக்கு உட்லண்ட்ஸ் திரையரங்கில் நிறைவு விழா நடைபெறும். தொடர்ந்து விருது வெல்லும் தமிழ் திரைப்படம் திரையிடப்படும்.

காலை 10 மணி

These are the Rules /Croatia/Ognjen Svilicic/77’/2014

these_are_the_rule_2255399fமஜா, ஐவோ, இருவரது மகன் டோமிக்கா மூவரும் ஒரு எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மஜாவும் ஐவோவும் வேலையிலிருந்து ஓய்வுபெற்று சற்றே பொருளாதார நெருக்கடியையும் சந்தித்து வருபவர்கள். 18 வயது மகன் டோமிக்கா கிராஜுவேட் படித்து வருபவன். ஒருநாள் எந்தக் காரணமுமின்றி தெருவில் சுற்றித்திரியும் டீன்ஏஜ் கும்பல் ஒன்று டோமிக்காவை தாக்கிவிட்டுப் போய்விடுகிறது.

மறுநாள் அவனுக்கு தலை கடுமையாக வலி தாளமுடியாமல் துடிக்கிறான். உடனே அவனை மருத்துவமனைக்கு கொண்டுசெல்கிறார்கள் அவனது பெற்றோர்கள். மருத்துவர்கள் சாதாரண காயம்தான் என்று கட்டுபோட்டு அனுப்பிவிடுகிறார்கள். விரைவில் அவன் நினைவிழந்த நிலைக்குப் போய்விடுகிறான். அதுமட்டுமின்றி வாழ்வா சாவா என்ற கேள்வியும் உருவாகிவிடுகிறது. இதனால் மிகவும் கவலையடைந்த அவனது பெற்றோர்கள் மோசமாக உள்ள அரசாங்க விதிமுறைகள், சமூக சூழ்நிலைகளை எதிர்த்துப் போராட வேண்டுமென்று முடிவெடுக்கிறார்கள்.

2008ல் குரோஷியாவில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இப்படம் எடுக்கப்பட்டது. ஹைஸ்கூல் கிராஜூவேட் படிக்கும் 18 வயது இளைஞனை டீன்ஏஜ் பையன்கள் சிலர் அடித்து காயப்படுத்திவிட அவன் இறந்துவிடுகிறான். அது அப்போது ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படமும் பிள்ளைகளை நல்லபடியாய் வளர்க்க போராடும் பெற்றோர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

மதியம் 11.30 மணி

On the Wings of Imagination/Iran/Frahad Mehranfar /100’/2014

on_the_wings_2255400a

பஹ்ராம் இயற்கை எழில்மிகுந்த ஒரு இடத்திற்கு தனது ராஹாவுடன் செல்கிறான். அவளுக்கு சில கற்பனைத்திறன் உண்டு. பஹ்ராம் ஒரு திரைக்கதை எழுத்தாளர். தனது தோல்விக்கெல்லாம் மனைவியைக் குறித்த மனக்குழப்பங்கள்தான் காரணம் என நினைக்கிறான். யதார்த்தத்திற்கும் கற்பனைக்கும் நடுவே உள்ள அவனது பயணம் தொடர்கிறது. மரணத்தையும் இருப்பையும் நேருக்கு நேர் எதிர்கொள்கிறான். இந்தப் பயணம் அவரை திரும்பக் கொண்டுவந்து சேர்க்கவில்லை. 2014 கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் பங்கேற்றது.

மதியம் 1.30 மணி

Blitzpatrollie / Andrew Wessels / South Africa / 2013 / 109′

blitz_2255402aஜோன்ஸ்பேர்க் நகரத்தில் உள்ள பிரபலமற்ற காவல் நிலையத்தில் நாயகர்கள் இருவர் பணிபுரிந்து வருகின்றனர். தவறு செய்பவர்களை பிடித்து அடித்து துவம்சம் செய்து, போலீசுக்கே உரித்தான தோரணையுடன் நடக்க வேண்டும் – இப்படி எண்ணற்ற கனவுகளுடன் போலீஸில் சேர்ந்த ஒரு நாயகனுக்கு தன் வேலையில் தான் எதிர்ப்பார்த்த சவால், சண்டைகள் அமையாமல் இருப்பது வருத்தத்தை தருகிறது. அடிக்கடி தன்னை நச்சரிக்கும் மாமியாரை எப்படியாவது வீட்டிலிருந்த வெளியனுப்ப வேண்டும் என்கிற கவலை மற்றொரு நாயகனுக்கு.

எப்போதும் போல் ஒரு சிறிய தவறு நடந்ததை ஆய்வு செய்வதற்காக நாயகர்கள் இருவரும் செல்ல, அப்போது பெரிய அளவில் நடக்கப்படுகிற போதை பொருள் கடத்தல் பற்றிய தகவல் தெரியவருகிறது. தாங்கள் எதிர்பார்த்த சவால் வந்துவிட்டதாக உணரும் நாயகர்கள் டிபார்ட்மென்டில் தங்கள் பங்கினை உணர்த்துவதற்கான சரியான சந்தர்ப்பம் இதுவே என உணர்கின்றனர். இதன் பிறகு அடிதடி, க்ரைம் என படம் டேக் டைவர்ஷன் எடுக்கிறது.

மாலை 3.30 மணி

Fly Dakota Fly/Japan/Seiji Aburatai/109’/2013

dakopta_2255401a

1946ஆம் நடைபெறும் கதை. ஒரு பிரிட்டிஷ் ராணுவப் போக்குவரத்து விமானம் ஷங்காயிலிருந்து புறப்பட்டு டோக்கியோ நகருக்குச் செல்கிறது. திடீரென விமானத்தில் ஏதோ கோளாறு என சாடோத் தீவில் தரையிறக்கப்படுகிறது. அந்த பிரிட்டிஷ் ராணுவத்தினர் அனைவரும் ஒரே மாதிரியான கவலையில் இருக்கின்றனர்.

அங்கு வசிக்கும் மக்கள் தங்கள் தீவுக்கு வந்திருக்கும் புதிய விருந்தினர்களை குழப்பமாகப் பார்க்கிறார்கள். என்றாலும் அடுத்த 40 நாட்களுக்கு தீவைச் சேர்ந்தவர்கள் மறுபடியும் விமானம் புறப்படும் வரை அவர்களை நன்றாகக் கவனித்துக்கொள்கிறார்கள். அங்கு ஓட்டல் நடத்தும் ஒருவரின் மகள் அவர்களில் சிலரை மட்டும் தங்க வைக்கிறாள். 2014 மாண்ட்ரியல் உலகத் திரைப்படவிழாவில் பங்கேற்றது.

மாலை 6.15 மணி

உட்லண்ட்ஸ் திரையரங்கில் நிறைவு விழா நடைபெறும். தொடர்ந்து விருது வெல்லும் தமிழ் திரைப்படம் திரையிடப்படும்.

Comments

comments