சென்னை 12-வது சர்வதேச பட விழாவில் புதன்கிழமை உட்லண்ஸ் திரையரங்கில் திரையிடப்படும் படங்களின் அறிமுகக் குறிப்புகள் இவை:

காலை 10 மணி

No Thank You/Finland/Samuli Valkam a/97’/2014no_thank_u_2254226f

திருமண வாழ்க்கைக்குப் பிறகு நடுத்தர வயதைக் கடந்துகொண்டிருப்பவள் ஹெலி. ஆனால் இன்னமும் அவளுடன் நெருக்கத்தை விரும்புகிறான் அவளது கணவன். ஆனால் அவளோ பிடிகொடுக்காமல் தவிர்த்து வருகிறாள். உடல்நலங்குன்றிய கணவனிடத்தில் அவளுக்கு உற்சாகமில்லை. அதே நேரம் இளம் மாணவர்களுடன் வறட்சியான வாழ்க்கையே தொடர்கிறது.

அவளது வாழ்வில் ஜெர்னோ என்பவன் குறுக்கிட்டு அவளுக்குப் பிடித்தமான விடியோ விளையாட்டுக்கள், ஜாஸ் இசைகள் என எதைஎதையோ காட்டி அவளிடம் நெருங்க, அவளும் அனுமதிக்கிறாள். ஆனால் விரைவிலேயே அவளுக்கு ஒரு விஷயம் புரிகிறது;தனக்கு வாழ்க்கையில் எது தேவை; எது தேவையில்லை என. இப்படம் சிகாகோ உலகப்படவிழாவில் பார்வையாளர் சிறப்பு விருதைப் பெற்றது.

மதியம் 12 மணி

The Sentimentalist/Greece/Nicholas Triandafyllidis/94’/2014

sentimentalist_2254224a

எளிதில் உணர்ச்சி வசப்படும் இரு அடியாட்கள் மெர்குரி மற்றும் ஜான். இவர்கள் தி மாஸ்டர் எனும் கள்ளச்சந்தை வியாபாரியிடம் வேலை செய்பவர்கள். சிலைகள், ஓவியங்கள் போன்ற பழம்பொருட்களைக் கடத்துவது அவர்கள் தொழில். அந்த தப்பான காரியத்தையே இவர்கள்தான் செய்கிறார்கள். தடையாய் இருப்பவர்களின் கதையை முடித்துவிடுவார்கள்.

எதையும் சந்தேகிக்கும் வகை சேர்ந்த, வயதான மனிதனான மாஸ்டர் தனது பதின்ம வயது மகளோடு கடற்கரைக்கு எதிரேயுள்ள தனி வீட்டில் வசிப்பவன். அவனது அடியாட்களின் ஒருவனான மெர்க்குரி மாஸ்டரின் மகளைக் காதலிக்கிறான். இன்னொரு அடியாள் ஜான் என்பவனோ செக்ஸ் பணியாளினி ஒருத்தியிடம் தனது விருப்பத்தைப் பூர்த்தி செய்துகொள்கிறான். எளிதில் உணர்ச்சிவசப்படும் இந்த இருவரும் யாரைவேண்டுமானாலும் எப்போதும் சுட்டுவிடும் உணர்ச்சிமயமானவர்கள். உணர்ச்சிவயப்படும் இன்னொரு முனையிலிருந்து அவர்களும் பதம் பார்க்கப்படுவது உச்சபட்சம்.

மதியம் 3.30 மணி

Geranimo/ Algeria/Franvce/Tony Gatli//107/2014

geronimo_2254227a

16 வயது மணமகள் நில் டெர்ஸி, திருமண விழாவிலிருந்து தப்பித்துச் சென்றுவிடுகிறாள். திருமணம் தடைபடவே, டெர்ஸியின் பெற்றோர்கள் மிகுந்த சங்கடத்துக்கு ஆளாகின்றனர். வெகுதூரத்தில் காத்திருக்கும் காதலனிடம் டெர்ஸி போய் சேர்ந்துவிட, துருக்கிய பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த டெர்ஸியின் உறவினர்கள் வெகுண்டெழுகின்றனர். அவனோ ஸ்பானிய பின்புலம் கொண்டவன். இரு குடும்பத்திற்கும் பகை மூள்கிறது.

தெற்கு பிரான்ஸ் செயின்ட் பியரே பகுதி இருவேறு குழுக்களின் சண்டைக் களமாக மாறிவிடுகிறது. அவர்களை சமரசம் செய்யச் செல்கிறாள் ஜெரோமினோ எனும் இளம் சமூக சேவகி. பதின்ம பருவத்தில் மனப்போராட்டத்துக்கு ஆட்படும் இளம் சமுதாயத்தை குழப்பங்களிலிருந்து விடுவித்து நல்வழிநடத்தும் களப்பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவள். அவள்தான் இதற்கெல்லாம் காரணம் என இவளைக் குறிவைத்து வெறித்தனமாக தாக்க முற்படுகிறது ஒரு கும்பல். ஆனால் ஜெரோமினோ இந்த இருவேறு பிரிவினரின் தாக்குதல்களைக் கண்டு அஞ்சாமல் அவர்களைப் பண்படுத்த முயலுகிறாள்.

இளைஞர்களின் ஆட்டம், காதைக்கிழிக்கும் ராக் இசை, காதல், சண்டைக் காட்சிகள், சேஸிங் என விறுவிறுப்பு களைகட்டும் இப்படத்தில் சமூகப் பார்வையும் அடிநாதமாய் இருக்கிறது. 2014 கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறப்புத் திரையிடலாகப் பங்கேற்ற படம்.

மாலை 4.30 மணி

The Fool / Durak / Yuriy Bykov / Russia / 2014 / 116′

the_fool_2254223a

ஊழல்மிகு ப்ளம்பர் ஒருவரிடம் உதவியாளாக பணிபுரியும் நாயகன் ஒரு தரமான பொறியியலாளன் ஆக முயற்சிக்கிறான். ஒரு நாள் எப்போதும் போல் உடைந்த குழாய்யொன்றை சீர் செய்வதற்கான அழைப்புவர, கட்டிடம் ஒன்றிற்கு செல்கிறான். சென்ற இடத்தில் கட்டிடமே 24 மணிநேரத்தில் இடிந்திடக் கூடும் என்பதை உணர, கட்டிடத்தில் 800 மக்கள் குவிந்து கிடக்கின்ற நிலைமை அவன் அச்சத்தை பெருகிடச் செய்கிறது.

பேராசையால் ஊழலுக்கு இரையாகிய அதிகாரவர்க்கங்களை அந்த ஓர் இரவிற்குள் சந்தித்து உண்மை நிலையை உணர்த்திடப் பார்க்கிறான். தன் நெறிகளில் வழுவாத நாயகன் உயிர்களை காப்பாற்றினானா? பொறுப்பேற்க மறுத்து குறைகளை கூறி விலகிடப் பார்க்கும் அதிகாரிகளால் கோமாளியாக்கப்பட்டு நின்றானா? பரபரப்புடன் விரிகிறது கதை.

மாலை 7.15 மணி

Obsessed/korea/Kim Dae-woo/132’/2014obsessed_2254225a

வியட்நாம் போர் முடிவுக்கு வந்த நேரம். 1966-ன் கோடைக்காலம். போரை வெற்றிகரமாக முடித்தவரும் உயர் ராணுவ அதிகாரியுமான கலோனில் கிம் ஜின் ப்யியாங்குக்கு ஜெனரலாகப் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அச்சமயம் விழா ஒன்றில் கமாண்டரின் குடும்பத்தினரை – முக்கியமாக அவருடைய அழகான மனைவியைப் பார்த்து சற்றே பொறாமைப்படுகிறான்.

உண்மையில் இவனுக்கு ஒரு அழகான மனைவி இருந்தாள். ஆனால் அவள் போர் தொடங்கியதிலிருந்தே மனஉளைச்சல், தலைவலி என்று கோளாறு ஏற்பட்டு இறந்துபோனாள். ஒருநாள் இரவு ஜின் பியாங் சமீபத்தில் மாற்றலாகிவந்த கேப்டன் ஒருவரின் சீன-கொரியன் மனைவி காஹியானை எதிர்கொள்கிறான். அவர்கள் காதலில் பிணைகின்றனர். மேலும் காதல் பிரிவில் அவளை நினைத்து மிகவும் துன்புறுகிறான். பின்னர் அவன் நினைத்ததெல்லாம் சாதிக்கிறான்.

Comments

comments