kjசென்னையில் நடந்து வந்த 12வது சர்வதேச திரைப்பட விழா நேற்று (டிச 25) நிறைவடைந்தது. இதில் சுமார் 56 நாடுகளைச் சேர்ந்த 160 படங்கள் திரையிடப்பட்டது. விருதுக்கான பிரிவில் 12 தமிழ் படங்கள் போட்டியிட்டன.

அதில் சிறந்த படமாக குற்றம் கடிதல் படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்காக தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாருக்கும், சிருஷ்டி சிலுவப்பனுக்கும் இயக்குனர் பிரம்மாவுக்கும் விருது வழங்கப்பட்டது. குற்றம் கடிதல் ஏற்கெனவே பல்வேறு திரைப்பட விழாக்களில் விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த இயக்குனராக கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை இயக்கிய பார்த்திபன் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றார்.

பூவரசம் பீ பீ, கதை திரைக்கதை வசனம் இயக்கம் படங்கள் ஜுரி விருதை பெற்றது. வினோத் இயக்கத்தில் மனோபாலா தயாரித்த சதுரங்க வேட்டை சிறந்த படத்துக்கான இரண்டாவது விருது பெற்றது.

நிறைவு மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், இண்டோ சினி அப்ரிசேஷன் செயலாளர் தங்கராஜ், நடிகைள் பூர்ணிமா பாக்யராஜ், ராதிகா, இயக்குனர் பி.வாசு, கார்த்திக் சுப்புராஜ். நடிகர்கள் மோகன், அபிநய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments

comments