idhhசிம்புவை வைத்து படம் எடுத்தால் அந்தப்படத்தின் தயாரிப்பாளர்கள் ரோட்டுக்கு வந்துவிடுவார்கள் போலிருக்கிறது.

கடந்த சில வருடங்களில் சிம்புவை வைத்து படம் படம் தயாரித்தவர்களின் இன்றைய நிலைமையை யோசித்தால் நாம் சொல்வதில் உள்ள உண்மை புரியும்.

இதில் வேடிக்கை ப்ளஸ் வினோதம் ப்ளஸ் காமெடி என்னவென்றால்…இந்தப் பட்டியலில் அவரது அப்பா டி.ராஜேந்தரும் சேர்ந்துவிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருப்பதுதான்.

டி.ராஜேந்தரின் ‘சிம்பு சினி ஆர்ட்ஸ்’ நிறுவனமும், இயக்குநர் பாண்டிராஜின் பசங்க புரடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வரும் படம் – இது நம்ம ஆளு.

சிம்புவும் நயன்தாராவும் மீண்டும் இணைந்து நடிப்பதால், இது நம்ம ஆளு படத்தின் மூலம் பல கோடிகளை பாக்கெட்டில் போட்டுக் கொள்ளலாம் என்ற கனவில் இருந்தார் பாண்டிராஜ். காரணம் இப்படத்தில் அவரும் தயாரிப்பாளர்.

பாண்டிராஜ் கனவில் மண்ணை அள்ளிப்போட்டார் சிம்பு.

லேட்டஸ்ட் தகவலின்படி…இது நம்ம ஆளு படம் ட்ராப்பாகிவிட்டது என்று படத்துறையில் பேச்சு அடிபடுகிறது.

படத்துறையில் மட்டுமல்ல, பாண்டிராஜ் வட்டாரத்திலும் இப்படியொரு தகவல் சர்வசாதாரணமாக பேசப்பட்டு வருகிறது.



சிம்பு தரப்பில் விசாரித்தால், யார் சொன்னது இது நம்ம ஆளு அடுத்த மாசம் ரிலீஸ் என்று கூசாமல் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

சிம்புவின் கையில் புதிய படமில்லை.

எனவே, ராத்திரி முழுக்க சரக்கடித்துவிட்டு, அதிகாலை வீட்டுக்கு வரும் சிம்பு சாயந்தரம் வரை குறட்டைவிட்டு தூங்குகிறாராம்.

இது நம்ம ஆளு நாயகியான நயன்தாராவோ சிம்பு படத்தில் நடித்ததை கெட்ட கனவாக மறந்துவிட்டு, விஜய்சேதுபதி உடன் நானும் ரௌடிதான் படத்தில் நடிக்கப்போய்விட்டார்.

இயக்குநர் பாண்டிராஜோ சூர்யா தயாரிக்கும் குழந்தைகள் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இதை எல்லாம் வைத்து இது நம்ம ஆளு படம் ட்ராப்பாகிவிட்டது, இனி அந்தப்படம் வரவே வராது என்ற பேச்சு படத்துறையில் மீண்டும் அடிபட தொடங்கிவிட்டது.

இதெல்லாம் தெரிந்தும், கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல், ”இது நம்ம ஆளு’ படத்தின் டாக்கி போர்ஷன் படப்பிடிப்பு முடிந்துவிட்டு, அதன் எடிட்டிங், டப்பிங், கலர் கரெக்ஷன் போன்ற வேலைகள் எல்லாம் முடிந்து விட்டது. ஓரிரு பாடல்களின் படப்பிடிப்பு மட்டும்தான் பாக்கி. அதையும் விரைவில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்”

என்று சொல்லிக் கொண்டு விநியோகஸ்தர்களிடம் அட்வான்ஸ் வாங்க ‘படம் காட்டி’ வருகிறார் – சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர்.

Comments

comments