ve-sekarநீங்களும் ஹீரோதான், நாம் புடிச்ச மாப்பிள்ளை, பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், ஒண்ணா இருக்க கத்துக்கணும், பொறந்த வீடா புகுந்த வீடா உள்பட பல தரமான படங்களை இயக்கியவர் வி.சேகர். தனது ஒவ்வொரு படத்திலுமே குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு படமாக்கிய இவர், தற்போது தனது மகன் காரல்மார்க்ஸை வைத்து சரவண பொய்கை என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

சமீபகாலமாய் தமிழ் சினிமாவில் ஏற்பட்டிருக்கும் மாறறங்கள் குறித்து இவர் கூறுகையில், உலகத்தரத்தில் தமிழ் சினிமா சென்று கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், அது டெக்னிக்கல் ரீதியாகத்தான் உள்ளது. நமக்குள் எவ்வளவு விசயங்கள் இருக்கும்போது வெளியில் இருந்து எடுக்கும் விசயங்கள்தான் அதிகமாக உள்ளது. ஆனால் என்னதான் வெளியில் இருந்து டெக்னிக்கல் விசயங்களை பின்பற்றினாலும் படங்களில் சொல்லப்படும் கருத்து நம்மளுடைய பண்பாட்டை சேர்ந்ததாக இருக்க வேண்டும. அதாவது சட்டை வேணும்னா ஃபாரினா இருக்கலாம். ஆனா குழந்தை நம்மதா இருக்கனும். மேலும், வெள்ளைக்காரனே நம்மளுடைய புராணங்களில் இருந்து கதை எடுக்கிறான். இது தெரியாம நாம அவங்ககிட்ட இருந்து எடுக்கிறோம். இந்த நிலை மாறணும. நம்மளுடைய கலாச்சார கதைகளை, நம்ம இயக்குனர்கள் படமாக்கணும். நமக்குள்ள இன்னும் எவ்வளவோ விசயங்கள் இருக்கு. இதை தெரிஞ்சிக்கிட்டா கதை ரீதியாகவும் நாம உலக தரத்தில் உயர்ந்து நிற்கலாம் என்கிறார்.

 

 

Comments

comments