sankagiri rajkumarசங்ககிரி ராஜ்குமார்1சத்யராஜ் கெஸ்ட் ரோலில் நடித்த வெங்காயம் என்ற படத்தை இயக்கியவர் சங்ககிரி ராஜ்குமார். அதையடுத்து, அவர் தற்போது நெடும்பாறைக்காடு என்ற படத்தை இயக்கியிருக்கிறார். காட்டுப்பகுதியில் வசிக்கும் ஒருவன் நாட்டுக்குள் வந்தபோது அவன் சந்திக்கும் பிரச்சினைகள்தான் இந்த படமாம். அப்படத்தில் நடித்துள்ள அனைத்து கேரகடர்களும் காட்டுவாசி கெட்டப்பில் நடித்துள்ளார்களாம்.

ஆனால் இதற்கு முன்னதாக, ஒன் என்ற பெயரிலும் ஒரு படத்தை இயக்கியிருக்கிறார் சங்ககிரி ராஜ்குமார். அந்த படத்தில் அவர் மட்டுமே நடித்திருக்கிறார். அதோடு, படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், கேமராமேன், எடிட்டர். இசையமைப்பாளர் என அனைத்தும் அவரேதானாம். கின்னஸ் சாதனைக்காக இந்த படத்தை அவர் எடுத்துளளாராம்.

ஆனால், இந்த ஒன் படத்திற்கு நெடும்பாறைக்காடு படம்தான் லீடாம். அதனால் அந்த படத்தை வெளியிட்டால்தான் இந்த ஒன் படத்தை அவரால் வெளியிட முடியுமாம். அதனால் நெடும்பாறைக்காடு பட வேலைகளை முடித்து விட்ட அவர், தற்போது அப்படத்தை வெளியிடும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். இந்த படம் எப்போது விறபனையாகி திரைக்கு வருகிறதோ அதன்பிறகுதான் அவரது ஒன் படம் கின்னஸ் சாதனைக்கு அனுப்பி வைக்கப்படுமாம்.

Comments

comments