K_Balachander_MGRசென்னை: டைரக்டர் பாலச்சந்தர் எம்.ஜி.ஆர்., படத்தை இயக்காதது ஏன் என்பது குறித்து டைரக்டர் வசந்தபாலன் விவரித்துள்ளார். பாலச்சந்தர் மறைவு குறித்து அவர் கூறுகையில், ஏராளமான நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தி, வெற்றிகரமான இயக்குநராக வலம்வந்த பாலச்சந்தர், எம்.ஜி.ஆரை வைத்து எந்த படத்தையும் இயக்கவில்லை. அது குறித்து அவரிடம் கேட்ட போது, எம்.ஜி.ஆரை வைத்து நான் படமெடுத்தால் அது எம்.ஜி.ஆர்., படமாகத்தான் இருக்குமே தவிர, பாலச்சந்தர் படமாக இருக்காது. நான் இயக்கும் படம் என் படமாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். இவ்வாறு பாலச்சந்தர் தெரிவித்தார். எம்.ஜி.ஆர்., போன்ற மிகப்பெரிய நடிகரின் படத்தை இயக்க மறுத்த தைரியம் பாலச்சந்தருக்கு மட்டுமே உண்டு. இவ்வாறு வசந்த பாலன் தெரிவித்தார்.

 

Comments

comments