kammஇயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் கடந்த 23ந் தேதி காலமானார். நேற்று நடந்த அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இதில் அவரால் அறிமுகப்படுத்தபட்ட ரஜினிகாந்த் உள்ளிட்ட அத்தனை கலைஞர்களும் கலந்து கொண்டார்கள். கமலஹாசன் உத்தமவில்லன் பணிகளுக்காக அமெரிக்கா சென்றிருப்பதால் வரமுடியவில்லை. இந்த நிலையில் கமல் தனது பேஸ்புக் மூலம் வீடியோ இரங்கல் அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது , தமிழ் திரையுலகிற்கு வாழ்நாளில் தொடர் கொடை கொடுத்தவர் அவர் போல் வேறு யாரும் இருக்க முடியாது. அவர் கொடை வள்ளல். 100 படங்களுக்குமேல் இயக்கியதோடல்லாமல் பல நூறு கலைஞர்களை அறிமுகப்படுத்தியவர். அதில் நானும் ஒருவன். எனது வற்புறுத்தலின் பேரில் உத்தமவில்லனில் தன்னை பதிவு செய்தார். அது என் வாழ்நாளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். எந்தெந்த விஷயங்களுக்கு, எத்தனை விஷயங்களுக்கு அவருக்கு நன்றி சொல்வது என்று தெரியவில்லை. சடங்குகளில் நம்பிக்கை இல்லாதவன் நான். அதனால்தானோ என்னவோ அவரது இறுதி சடங்கில் என்னால் பங்கு கொள்ள முடியாமல் அவர் எனக்கு அளித்த சினிமாவை செய்து கொண்டிருக்கிறேன். இதுவே அவருக்கு செய்யும் அஞ்சலியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். கே.பி அவர்களின் குரல் அவரது மாணக்கர்களின் கலைவழியாக தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கும். கேட்க வைப்பது எனது கடமையும் கூட. அய்யா நன்றி.

Comments

comments