dsgfதமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு வருடக் கடைசி வாரத்தில் அவ்வளவாக பெரிய படங்கள் வெளியாகாது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பொங்கல் வருவதால் அன்றைய தினத்தில் படங்களை வெளியிடுவார்கள் அல்லது நவம்பர் மாதத்திற்குள்ளாகவே படத்தை வெளியிட்டு முடித்து விடுவார்கள். ஆனால், 2015ம் ஆண்டு பொங்கலுக்கு இரு பெரும் படங்களான “ஐ, என்னை அறிந்தால்” ஆகிய படங்கள் வெளிவர இருப்பதால் அவற்றுடன் மோத வேண்டாம் என்று கருதி டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று ஐந்து படங்கள் வெளிவந்தன.

அவற்றில் “கப்பல், மீகாமன், கயல், வெள்ளக்கார துரை” ஆகிய நான்கு படங்களைப் பற்றிய பேச்சுக்கள்தான் அதிகமாக இருக்கிறது. இந்த நான்கு படங்களுக்குள் ஒரு அதிசய ஒற்றுமை இருப்பதைப் பற்றி சமூக வலைத்தளங்களில் வித்தியாசமான கமெண்ட் ஒன்று பரவி வருகிறது. அதாவது, ‘கப்பல்’ என்பது கடலில் பயணிக்கும் ஒன்று. ‘மீகாமன்’ என்றால் ‘கப்பலின் கேப்டன்’ என்று பொருள். ‘கயல்’ என்றால் மீன் என்று அர்த்தம், கடலில்தான் அதிக மீன்கள் பிடிக்கப்படுவது வழக்கம். ‘வெள்ளக்கார துரை’ என அழைக்கப்படும் அந்த ஆங்கிலேயர்கள் கடல் மார்க்கமாக கப்பல் வழியாக இந்தியாவிற்குள் புகுந்து நம்மை பல காலம் ஆட்சி செய்தவர்கள். அடடே…என்ன ஒரு ஆச்சரியமான கண்டுபிடிப்பு. நம்ம ஆட்கள் எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா…என சுவாரசியமாக, நிஜமாகவே பாராட்ட வேண்டிய கண்டுபிடிப்புதான் இது…

 

Comments

comments