Kollywood-news-10413யார் அதிக சம்பளம் வாங்குவது என்று டாப் ஹீரோயின்களிடையே மறைமுக போட்டி நடக்கிறது. தற்போது முதலிடத்தை அனுஷ்கா பிடித்திருக்கிறார். அவர் ஒரு படத்துக்கு ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை வாங்குகிறார்.

அவரது சம்பளத்தை எட்டிப்பிடிக்க நயன்தாரா, காஜல் அகர்வால், தமன்னா போன்ற ஹீரோயின்கள் போட்டியில் உள்ளனர். இவர்களில் காஜலுக்கு அதற்கான வாய்ப்பு கதவை தட்டி இருக்கிறது. சுசீந்திரன் டைரக்ஷனில் தமிழ், தெலுங்கில் விஷால் தயாரித்து நடிக்கும் படமொன்றில் நடிக்க காஜலிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. ஒரே நேரத்தில் இரண்டு மொழியிலும் இப்படம் உருவாக்கப்படுவதால் ஒட்டுமொத்தமாக ரூ.3 கோடி கொடுத்துவிடுங்கள் என்று காஜல் கூறுகிறாராம்.

இதை கேட்டு விஷால் அதிர்ச்சி அடைந்துவ¤ட்டார். அவ்வளவு சம்பளம் கொடுத்தால் கம்பெனிக்கு கட்டுப்படியாகாது என்று விஷால் தரப்பு பேரம் பேசுகிறது. காஜலோ பிடித்த பிடியிலிருந்து இறங்கி வர மறுக்கிறார். இதனால் அவரது கால்ஷீட் ஓகே ஆவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. காஜல் ஆசை ஈடேறி அனுஷ்காவை மிஞ்சுவாரா என்பது கூடிய விரைவில் தெரிந்துவிடும் என்று கோடம்பாக்கம் வட்டாரம் பட்டிமன்றம் நடத்தினாலும் உள்ளதும் போச்சு நொள்ள கண்ணு என்ற கதி காஜலுக்கு வந்துவிடக்கூடாது என்று சிலர் கவலையும் தெரிவிக்கின்றனர்.

Comments

comments