dfgddஇப்போது புகழ்பெற்ற பன்ஞ் டயலாக்குகளை டைட்டிலாக வைத்து படம் எடுப்பது பேஷன், அந்த வரிசையில் அடுத்து வருகிறது “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா”. சூரியன் படத்தில் கவுண்டமணி பேசும் சூப்பர் டயலாக் இது. காலத்தை கடந்தும் பொருந்தியிருப்பதால் இப்போதும் இந்த டயலாக்கிற்கு தனி மவுசு உண்டு.

குளோபல் கிங் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் இந்த டயலாக்கையே டைட்டிலாக கொண்டு ஒரு படத்தை தயாரிக்கிறது. ஷக்தி அஜய்குமார் இயக்குகிறார், ஷாம்ராஜ் இசை அமைக்கிறார், மஸ்தான் ஒளிப்பதிவு செய்கிறார். தற்காப்பு, கரையோரம் படங்களில் நடித்து வரும் கணேஷ் பிரசாத் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் பவர் ஸ்டார் சீனிவாசன், ஜான் விஜய், சுப்பு பஞ்சு, என காமெடி பட்டாளம் நடிக்கிறது.

“இது அரசியல் கூத்துக்களை காமெடியாக சொல்லும் படம். எந்த தனி அரசியல் கட்சியையோ, தனி நபர்களையோ கிண்டல் செய்யும் படம் அல்ல. ஆனால் படத்தில் வரும் கூத்துகள் எல்லா கட்சியிலும் நடந்து கொண்டிருப்பவையாக இருக்கும்” என்கிறார் இயக்குனர் ஷக்தி அஜய் குமார்.

Comments

comments