arooo‘ராஜா ராணி’க்கு பின், ஆர்யா நடித்த, ‘இரண்டாம் உலகம்’ ஊத்திக் கொண்டது. ‘ஆரம்பம்’ படத்தில் கெஸ்ட் ரோலில் தான் நடித்தார். இந்த பிரேக்கிற்கு பின், இப்போது, ‘மீகாமன்’ வெளியாகியுள்ளது. இதனால், சந்தோஷத்தில் இருக்கிறார், ஆர்யா. அதுவும், இந்த படத்தில், ஹன்சிகாவுடன் ஜோடி சேர்ந்துள்ளதால், அவரின் சந்தோஷம் இரண்டு மடங்காகியுள்ளது.

தன் படங்களின் வெற்றி, தோல்வி குறித்து அதிகம் அலட்டி கொள்ளாத ஆர்யா, முதன்முறையாக, இந்த படத்துக்காக சற்று பதற்றமடைந்து உள்ளாராம். ‘மீகாமன்’ என்றால், கப்பலின் கேப்டன் என்று அர்த்தம். ஆர்யா, இந்த படத்தை கரை சேர்ப்பாரா என்பது, இன்னும் ஒரு சில நாட்களில் தெரிந்து விடும்.

 

Comments

comments