1 (1)1989-ல் ராமராஜன்-கனகா நடிப்பில் வெளியான படம் கரகாட்டக்காரன். கங்கை அமரன் இயக்கி பாடல்கள் எழுதிய இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். கவுண்டமணி-செந்தில்-கோவை சரளாவின் காமெடியும் பெரிய அளவில் பேசப்பட்டது. ஒரு வருடம் ஓடி சாதனை புரிந்த இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டானது.

அதில், மாங்குயிலே பூங்குயிலே, மாரியம்மா, ஊரு விட்டு ஊரு வந்து, இந்த மான், குடகுமலை காற்றில் வரும் -என அனைத்து பாடல்களுமே பட்டிதொட்டியெல்லாம் கலக்கியது. ஆனபோதும், இந்த படத்தின் பாடல்களை இதுவரை யாரும் ரீமிக்ஸ் செய்யவில்லை. ஆனால், தற்போது, கப்பல் படத்தை இயக்கியுள்ள கார்த்திக், இப்படத்திலுள்ள ஊரு விட்டு ஊரு வந்து என்ற மலேசியாவாசுதேவன் பாடிய பாடலை கப்பல் படத்துக்காக ரீமிக்ஸ் செய்திருக்கிறார்.

இப்படத்துக்கு புதுமுக இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார். மலேசியா வாசுதேவன் பாடிய ஊருவிட்டு ஊரு வந்து என்ற அந்த ரீமிக்ஸ் பாடலை பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி பாடியிருக்கிறார். இவர், ராம் இயக்கத்தில் வெளியான தங்க மீன்கள் படத்தில் இட்ம்பெற்ற ஆனந்த யாழை மீட்டுகிறாள் என்ற பாடல் உள்பட பல ஹிட் பாடல்களை பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

comments