Srikanth Om Shanthi Om Tamil Movie Latest Posterஸ்ரீகாந்த், நீலம் உபாத்யாயா நடிக்கும் படம் ஓம் சாந்தி ஓம். நீண்ட நாள் தயாரிப்பில் இருக்கும் இந்தப் படத்தை தற்போது வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஓம் சாந்தி ஓம் கதையும், சூர்யா நடிக்கும் மாஸ் படத்தின் கதையும் ஒன்றுதான் என்ற வதந்தி வேறு கிளம்பியிருக்கிறது. ஆனால் இது ஆத்மாக்களின் கதை என்கிறார் இயக்குனர் பிரபாகர்.

அவர் மேலும் கூறியதாவது: இது முன்னோர்களை வழிபடுகிற தேசம். மரணத்துக்கு பிறகும் முன்னோர்களின் ஆன்மா இந்த உலகத்தில் வாழ்வதாக நம்புகிறோம். நமது வேத நூல்களும் அதைத்தான் சொல்கிறது. மனிதர்கள் மறைந்து ஆன்மாக்களாக மாறும்போது அவர்கள் நல்லதை மட்டுமே செய்வார்கள். தங்கள் குடும்பத்தினர், நண்பர்களுக்கு உதவ அவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள். ஆனால் எதையும் அவர்களால் நேரடியாக செய்ய முடியாது. நமக்கு உணர்த்த முடியும். அதற்கு நாம் அவர்களை உணரத் தெரிந்திருக்க வேண்டும்.

அப்படி உணர்ந்து கொண்ட ஒருவனால் இந்த அவனது குடும்பத்துக்கு, சமூகத்துக்கு என்ன நன்மை நடக்கிறது என்பதுதான் கதை. பயமுறுத்துகிற அமானுஷ்ய சக்தியோ, பேயோ, பிசாசோ வரும் படம் அல்ல. மனதை வருடுகிற ஆத்மார்த்தமான படம். படம் பார்த்தவங்க நாளைக்கு ஏதாவது தப்பு பண்ண நினைச்சாகூட நம்ம தாத்தன், முப்பாட்டன் அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருப்பார்களோ என்ற சின்ன தயக்கம் வரும். அதுதான் படத்தோட வெற்றி என்கிறார். பிரபாகர்.

Comments

comments