54கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி 2014ம் ஆண்டில் 33 படங்களில் 82 பாடல்களை எழுதியுள்ளார். இதில் 67 பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டாகி உள்ளது.

செல்ஃபி புள்ள… (கத்தி), பூக்களே… (ஐ), மாஞ்சா… (மான்கராத்தே), நீ என்ன பெரிய அப்பாடக்கரா (என்னமோ ஏதோ), சரிதானா… (அமரகாவியம்), என் நெஞ்சில்… (நாய்கள் ஜாக்கிரதை), மோனோ கேஸலீனா.. (லிங்கா), போன்ற பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி உள்ளன. வழக்கமாக நா.முத்துகுமார்தான் அதிகமான பாடல்களை எழுதுவார். இப்போது அவருக்கு போட்டியாக மதன் கார்க்கி வந்திருக்கிறார். இதுதவிர நான்கு படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார்.

“திரையுலகில் ஓர் எழுத்தாளனாக நான் அடியெடுத்து வைத்து 5 ஆண்டுகள் நிறைவுறுகிறது. என் இந்தப் பயணம் தொடங்கிய நான் முதல் இன்றுவரை நீங்கள் கொடுத்து வரும் ஊக்கத்திற்கும், விமர்சனங்களுக்கும் நன்றி. எனக்கு சூழலும், சுதந்திரமும் தந்த என் இயக்குனர்களுக்கும், என் வரிகளுக்கு உருவம் தந்த இசை அமைப்பாளர்களுக்கும், பாடகர்களுக்கும், வாய்ப்பளித்த தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றி. இன்னும் அழகான, தரமான பாடல்களோடு வரும் ஆண்டும் அமையும் என்று நம்புகிறேன்” என்கிறார் மதன் கார்க்கி.

Comments

comments