Sandamarutham-Movie-Audio-Launch-Photos-28மேஜிக் பிரேம்ஸ் படநிறுவனம் சார்பில் சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தயாரிப்பில் சரத்குமார் இருவேடங்களில் நடித்து வரும் படம் – சண்டமாருதம்.

இப் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரசாத்லேப் திரையரங்கத்தில் நடைபெற்றது.

சண்டமாருதம் படம் தவிர, தனுஷ்- காஜல்அகர்வால் நடிப்பில் பாலாஜிமோகன் இயக்கத்தில் “மாரி”, விஜய் இயக்கத்தில் விக்ரம்பிரபு – கீர்த்திசுரேஷ் நடிக்கும் “இது என்ன மாயம்”, பாபி சிம்ஹா நடிப்பில் ஆடம்தாசன் இயக்கத்தில் “பாம்புசட்டை” போன்ற படங்களும் மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் தயாராகி வருகின்றன.

சண்டமாருதம் படத்தின் இசைவெளியீட்டு விழாவில், மாரி, இது என்ன மாயம், பாம்புசட்டை போன்ற படங்களின் அறிமுக விழாவையும் இணைத்து 4 இன் 1 விழாவாக நடத்தினார் ராதிகா.

விழாவில் சரத்குமார், தனுஷ், விக்ரம்பிரபு, விமல், மோகன், நரேன்,கலைப்புலி எஸ்.தாணு, பிரசன்னா, ராதாரவி, விஜயகுமார், சார்லி, ராம்கி, பாபி சிம்ஹா, பரத், மயில்சாமி, நரேன், ஜெயபிரகாஷ், அருன்சாகர், ரோபோ சங்கர், மிதுன், ஜெயஸ்ரீ, ஓவியா, நமீதா, லிஸி, ஸ்ரீபிரியா, நிரோஷா, கீர்த்திசுரேஷ், கே.எஸ்.ரவிகுமார், பாலாஜிமோகன், வி.சேகர், சுசீந்திரன், மதன்கார்க்கி, சமுத்திரகனி, ஆடம்தாசன், கே.ஆர். யாகியா, அபிராமி ராமநாதன், எஸ்.எ. ராஜ்கண்ணு, கே.ஆர்.செல்வராஜ், அருள்பதி, ஃபெப்சி ஜி.சிவா, ஏ.என்.சுந்தரேசன், நிரவ்ஷா, எல்.எம்.எம். சுவாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

சண்டமாருதம் படத்தின் இசைத் தட்டை தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்திரி வெளியிட இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், தனுஷ், விக்ரம்பிரபு மற்றும் அனைவரும் பெற்றுக் கொண்டனர்.

Comments

comments