விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்து உருவாகி வரும் படம் ‘ வாலு’. படத்தின் டப்பிங் உட்பட அனைத்து வேலைகளும் முடிந்து ஒரு பாடல் காட்சி மாட்டுமே பாக்கி இருக்கிறது.

குறளரசன் இசையில் டி.ஆர். பாடியுள்ள ஒரு பாடலில் சிம்பு  எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித், சிம்பு என நான்கு கெட்டப்களில் நடனம் ஆட உள்ளார். இதில் நான்கு  தலைமுறை நாயகிகளும் நடனம் ஆட உள்ளனர்.

இப்போதைக்கு சிம்ரன் மட்டுமே சிம்புவுடன் நடனமாடுவது உறுதி ஆகியிருக்கிறது. சரோஜாதேவி, குஷ்பு, நயன்தாரா ஆகிய மூவரையும் நடனமாட வைக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

யார் யார் நடனம் ஆடுவார்கள் என்ற  முழுமையான தகவல் 7ம் தேதிக்கு மேல் தெரியவருமாம்.
இந்நிலையில், அடுத்த செய்தியாக படம் டிசம்பர் 25ல் ‘வாலு’ வெளியாகும் என அறிவிப்புகள் வெளியான நிலையில் மீண்டும் படம் தள்ளிப்போடப்பட்டுள்ளது.

STR and Hansika Motwani in Vaalu Movie Stills

‘வாலு’ பிப்ரவரியில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிக்கையில் சிம்பு கூறியதவாது:

” ஒரு நடிகனாக இந்த வருடமும் எனது படம் வெளியாகாதது எனக்கும் ஏமாற்றமே. எனினும், படம் கண்டிப்பாக ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்பதால் படத்தை பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளோம்.

எனவே, ‘வாலு’  பிப்ரவரியில் வெளியாகும் . ‘இது நம்ம ஆளு’ கோடைகால விடுமுறையில் வெளியாகும் ” என சிம்பு தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 3ல் சிம்புவின் பிறந்தநாள் என்பதால் படம் அன்றைய தினம் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

comments