itraaaaபிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், பிரமாண்ட தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனின் தயாரிப்பில், எப்படிப்பட்ட கேரக்டருக்கும் உடலை வருத்தும் நடிப்பு ராட்சசன் விக்ரமின் நடிப்பில் அதிபிரமாண்டமாய் உருவாகியுள்ள படம் ஐ. இந்திய சினிமாவையே ஏன் உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைக்கும் ஒரு படம் ஐ என்றால் மிகையல்ல. கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக உருவாகி வந்த ஐ படம் இப்போது பொங்கல் விருந்தாக வர இருக்கிறது.

ஐ படத்தில் விக்ரம், பாடி பில்டர், மாடலிங், கூன் விழுந்த கோரமுகம், மிருக மனிதன்… என பல்வேறு பரிமாணங்களில் நடித்துள்ளார். இதை ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர் மூலமாக நாம் அறிந்தோம். அதுமட்டுமின்றி இப்படத்தின் டீசரை பார்த்தவர்கள் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டி பெரும் சாதனை படைத்துள்ளது. விரைவில் 1 கோடியை தொட இருக்கிறது. 1 நிமிட டீசரையே 90 லட்சம் பேர் பார்த்த நிலையில், படத்தின் 2 நிமிட டிரைலர் இன்று (டிச. 18ம் தேதி) இரவு 10 மணிக்கு வெளியானது.

வெளியான அரைமணி நேரத்தில், உலகளவில் டுவிட்டரில் 7 இடத்தைப் பிடித்துள்ளது ஐ படத்தின் டிரைலர். இந்த தகவலை ஐ படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் நம்மிடம் தெரிவித்தார்.

ஐ படத்தின் டிரெய்லரை காண இங்கே கிளிக் செய்யவும்

Comments

comments