itrailerஉலக ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, பொங்கலுக்கு முன்னதாக, ஜனவரி 09ம் தேதி வெளியாக உள்ள ஐ படத்தின் புது டிரைலர், நாளை வெளியாக உள்ளது. உலகமெங்கும் 15 ஆயிரம் தியேட்டர்களில், இந்த புது டிரைலர் வெளியாகிறது. இளமைத் தோற்றத்திலான விக்ரம் முதல், ஜிம்பாடி, கூன் முதுகு, விலங்கின் உருவம் என விக்ரமின் பல்வேறு பரிமாணங்கள், இந்த டிரைலரில் இடம்பெற்றுள்ளது. முற்றிலும் மாறுபட்ட ஷங்கருக்கு உரிய பிரமாண்ட பாடல் காட்சிகள் உள்ளிட்டவைகள், இந்த டிரைலரில் இடம்பெற்றுள்ளன. ஆஸ்கார் திரைப்பட நிறுவனத்தின் மிகுந்த பொருட்செலவில், ஐ படம் உருவாகியுள்ளது. 120 விநாடிகள் கால அளவிலான புது டிரைலர், ரசிகர்களின் கண்களுக்கு மிகப்பெரிய விருந்து படைக்க உள்ளது என்று கூறினால் அது மிகையல்ல…

Comments

comments