dfபொங்கல் ரேஸ் இப்போதே ஆரம்பித்து விட்டது. 2015 பொங்கல் சிறப்பாக ‘ஐ’, ‘என்னை அறிந்தால்’, ‘ஆம்பள’ , ‘காக்கி சட்டை’, ‘கொம்பன்’ என ஐந்து படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் ‘ஐ’, ‘என்னை அறிந்தால்’, ‘ஆம்பள’ உள்ளிட்ட படங்கள் உறுதியாகியுள்ளன. ‘ஆம்பள’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஆர்யா விஷால் குறித்து பேசும்போது.

’என்ன மச்சான் நெறைய பெரிய படமெல்லாம் வருது பரவாயில்லையா என்றேன், அதற்கு விஷால் ‘எவனா இருந்தாலும் வெட்டுவேன் ‘ என நம்பிக்கையாக கூறியதாக ஆர்யா பகிர்ந்துள்ளார்.

அதேபோல் தனது அடுத்த படத்திலும் ஹிப் ஹாப் தமிழாவை ஒப்பந்தம் செய்யும்படியும், அவரது இசை நன்றாக இருக்கிறது என பெருமையாக கூறியதாக விஷால் மற்றும் ஆதி குறித்து ’ஆம்பள’ இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார் ஆர்யா.

Comments

comments