10830136_781587928578163_5636141328700652314_oஅஜித் – கௌதம் மேனன் முதன்முறையாக இணைந்திருக்கும் என்னை அறிந்தால் படத்தின் டீசர் இன்று 4ம் தேதி பிறந்த நள்ளிரவு சரியாக 12 மணிக்கு யு டியூப் வீடியோ இணையதளம் மூலம் வெளியிடப்பட்டது. நள்ளிரவு நேரத்தில் கூட அஜித் ரசிகர்கள் கண் விழித்திருந்து படத்தின் டீசரை அடுத்த சில நிமிடங்களுக்குள் பரபரப்பாகப் பார்க்க ஆரம்பித்தார்கள். கடந்த சில நாட்களாகவே டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் என்னை அறிந்தால் படத்தின் டீசர் பற்றித்தான் பரபரப்பான விவாதம் நடைபெற்று வந்தது. அஜித் ரசிகர்கள் அனைவரும் ஒரே விதத்தில் “ #YennaiArindhaalTeaserStormOnDec4 ” என்ற ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி இந்திய அளவில் டிரெண்டிங்கில் இடம் பிடித்துவிட்டனர்.

நள்ளிரவில் வெளியிடப்பட்ட என்னை அறிந்தால் படத்தின் டீசரை வெளியான 12 மணி நேரங்களுக்குள் சுமார் 5 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இன்று பகல் முழுவதும் பலரும் பார்க்கும் பட்சத்தில் இன்னும் சில மணி நேரங்களுக்குள் 10 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து அது சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்னை அறிந்தால் படத்தில் இடம் பெற்றுள்ள வசனங்கள் அஜித் ரசிகர்களால் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன. “ஒரு மெல்லிசான கோடு, கோடுக்கு இந்தப் பக்கம் இருந்தன்னா நல்லவன், அந்தப் பக்கம் போயிட்டன்னா ரொம்ப கெட்டவன். இந்தப் பக்கமா இல்ல அந்தப் பக்கமான்னு முடிவு பண்ண நேரம் வந்துச்சி வாழ்க்கையில, ஒரு நாள்…வாழ்க்கை என்னை ஒரு தரம் மாத்துச்சி, ” என அஜித் குரலில் இடம் பெறும் அந்த பின்னணிக் குரல் வசனம் அஜித் ரசிகர்களால் ஆரவாரத்துடன் ரசிக்கப்பட்டு வருகிறது…

Comments

comments