NT_141206170306000000ந்தானத்தின் ஓவர் அளப்பறையால் வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்க, அந்த இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறார் காமெடி நடிகர் சூரி.

விஜய், சூர்யா உட்பட கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்களில் ஆஸ்த்தான காமெடியனாக மட்டுமில்லாமல் விமல், விதார்த், சிவகார்த்திகேயன் என இளம் ஹீரோக்கள் படங்களிலும் சூரிக்கென்று ஒரு தனி இடம் இருக்கிறது.

விஜய்யுடன் நடித்து விட்ட சூரிக்கு அஜித்துடன் நடிக்க ஆசை தான். அப்படிப்பட்ட வாய்ப்பு வந்தும் அதை மறுத்து விட்டாராம் சூரி.

அஜித் சாரோட வீரம் படத்துல தம்பி ராமையா கேரக்டருக்கு முதல்ல என்னைத்தான் டைரக்டர் சிறுத்தை சிவா நடிக்கக் கூப்பிட்டார்.

ஆனா அந்தக் கேடக்டர் அஜித் சாரை கலாய்க்கிற மாதிரி இருந்துச்சு. அதனாலேயே அந்தப்பட வாய்ப்பை நான் தவிர்த்து விட்டேன்.

அவரை கலாய்த்துதான் அவர் கூட நடிக்க வேண்டும் என்றால் அப்படிப்பட்ட ஒரு கேரக்டர் தனக்கு தேவையில்லை, அதைவிட கடைசி வரை நான் அஜீத் ரசிகனாகவே இருந்து விடுவேன் என்று ரகசியம் சொல்கிறார் சூரி.

ஊரில் நானே ஒரு அஜித் ரசிகன் தான். அஜித் படம் ரிலீசாகிற அன்னைக்கு கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் பண்றது மாதிரியான எல்லா வேலைகளையும் நானே செய்வேன். அந்தளவுக்கு அவரோட தீவிர ரசிகன் நான். அப்படிப்பட்ட என்னையே அஜித் சாரை கலாய்க்கச் சொன்னால் எப்படி? என்று உருகியிருக்கிறார் சூரி.

நீங்கதாங்க உண்மையான ரசிகன்.

Comments

comments