NT_141201150327000000பப்ளிமாஸ் நடிகையும், சமர்த்தான நடிகையும் தான் இன்றைய தேதியில் ரொம்பவே எக்ஸ்பென்சிவான நடிகைங்களாம். இரண்டு நடிகைகளுக்கும் பவுன்சர்கள் முதல் டச் அப் பாய் வரை பத்து பேர் வர்றாங்களாம். அத்தனை பேருக்கும் சம்பளம், பேட்டா கொடுக்க வேண்டும். இதுதவிர பப்ளிமாஸ் நடிகைக்கு சென்னை அண்ணாசாலையில் உள்ள ஏழு நட்சத்திர ஓட்டல் சாப்பாடுதான் பிடிக்குமாம். சென்னை பகுதியில் எங்கு ஷூட்டிங் நடந்தாலும் அந்த ஓட்டல் ஊழியர்கள் நான்குபேர் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து பரிமாறிவிட்டு போகிறார்களாம். இதற்கு தினமும் 25 ஆயிரம் பில்லாம்.

சமர்த்தான நடிகைக்கு ஸ்கின் ப்ராப்ளம் இருக்கிறதால தினமும் மூலிகை குளியல்தானாம். இதற்காக கேரள ஆயுர்வேத நிபுணர்கள் கூடவே இருக்காங்களாம். அவர்கள் தயார் செய்து தரும் மூலிகை தண்ணியிலதான் குளிப்பாராம். இதற்கு அந்த மூலிகை நிபுணர்களுக்கான செலவை தயாரிப்பாளர்தான் செய்ய வேண்டுமாம். நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் ஆகுதாம். எல்லாவற்றையும் சேர்த்தால் ஒரு நடிகைக்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வரை செலவு செய்கிறார்களாம்.

Comments

comments