ccபார்த்திபன் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படம் வெற்றி பெற்றதோடு, விமர்சன ரீதியாகவும் பார்த்திபனுக்கு இப்படம் நல்ல பெயரை பெற்று தந்தது. இப்படத்தின் வெற்றி பார்த்திபனுக்கு நல்ல உற்காகத்தை அளித்துள்ள நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார் பார்த்திபன். அதற்கு ‘கதை இருக்கு’ என்று டைட்டில் வைத்துள்ளார். ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் கதையின் நாயகியாக நடித்த அகிலா கிஷோரே இப்படத்திலும் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அத்துடன் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நடித்த அனைவரையும் இரண்டாம் பாகத்திலும் பங்குபெற செய்ய பார்த்திபன் திட்டமிட்டுள்ளாராம்.

Comments

comments