NT_141203072031000000ஓர் இரவு, அம்புலி 3டி ஆகிய படங்களை இயக்கிய ஹரி-ஹரீஷ் இருவரும் இணைந்து இயக்கிய படம் ஆ. இந்த படம் அவர்கள் இயக்கிய முந்தைய படங்களை விட மெகா ஹிட்டாகியிருக்கிறது. கடந்த வாரத்தில் வெளியான இப்படம் பார்க்க ரசிகர்கள் கூட்டம் படையெடுப்பதால் இப்போது இன்னும் அதிகப்படியான தியேட்டர்களில் ரிலீஸ் செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, நேற்று மதியம் இந்த ஆ படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. அப்போது, படக்குழுவினர் பத்திரிகையாளர்கள் முன்பு தோன்றி, ஆ படத்தைப்பற்றி பாசிட்டீவான விமர்சனம் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர். அதோடு, இந்த படம் பார்க்க முதலில் ரசிகர்களை தியேட்டருக்கு இழுத்தது மீடியாக்களின் பாராட்டுதான். அதையடுத்து இப்போது ரசிகர்களின் மவுத் டாக் காரணமாக இன்னும் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதனால்தான் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது என்றனர்.

மேலும் இந்த உற்சாகத்தோடு எங்களது டீம் அடுத்த பட வேலைகளை தொடங்கி விட்டனர் என்று தெரிவித்த அவர்கள், இதுவரை இயக்கிய மூன்று படங்களையுமே ஹரார் கதையில் உருவாக்கியவர்கள் நான்காவது படத்தை காமெடி கதையில் உருவாக்குகிறார்களாம். ஜம்போ 3டி என்ற பெயரில் உருவாகும் அப்படம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்குமாம்.

Comments

comments