asasaபுதிதாக வெளியாகும் திரைப்படங்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் உடனடி விமர்சனத்தையும் வரவேற்பையும் சந்திப்பது வழக்கமாக இருக்கும் காலம் இது. பாலிவுட் நடிகர் அமீர் கானின் சமீபத்திய படமான பிகே -ம் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் அமீர் கானின் படம் ட்விட்டரில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதோடு ,ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் குரல் கொடுக்கும் ஹாஷ்டேக் யுத்ததிற்கும் வித்திட்டுள்ளது.

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர்கான் நடித்துள்ள பிகே திரைப்படம் கடந்த 19 ம் தேதி வெளியானது. அமீர்கானின் இந்த படம் அது உருவாகி வந்த போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திருந்த நிலையில் வெளியானதுமே பரவலான கவனத்தை ஈர்த்தது.

வழக்கமான அமீர் கானின் படங்களின் நேர்த்தியான அம்சங்களுக்காக பாராட்டப்பட்டாலும் இந்த படத்தின் உள்ளடக்கம் காரணமாக விமர்சனத்திற்கும் ஆளானது. படத்தின் கதையும் ,ஒரு சில காட்சிகளும் இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக பலர் கருதினர். இப்படி கருதியவர்கள் டிவிட்டரில் தங்கள் கருத்தை வெளிப்படுத்தினர். அத்துடன் நில்லாமல் இந்த கருதுக்களுக்காக படத்தை புறக்கணிக்க வேண்டும் எனும் கருத்தையும் சிலர் முன்வைத்தனர். இதற்காகவே #BoycottPK எனும் ஹாஷ்டேகையும் உருவாக்கி படம் தொடர்பான விமர்சன கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். விரைவிலேயே இந்த ஹாஷ்டேக் பிரலமாகி மேலும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆனால், படம் விமர்சனத்தை மட்டும் சந்திக்கவில்லை. அதற்கு நிகராக பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. அமீர் கானின் ரசிகர்களும் சரி, படத்தில் மத நம்பிக்கையை தவறாக பயன்படுத்திக்கொள்பவர்கள் மீது நகைச்சுவையாகவும் நேர்த்தியாகவும் விமர்சனம் வைக்கப்பட்டுள்ள வித்ததால் கவரப்பட்டவர்களும் படத்தை பாராட்டி குறும்பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

அது மட்டுமல்ல, படத்தைப் புறக்கணிக்க வேண்டும் எனும் கோரிக்கைக்குப் பதிலடி கொடுப்பது போல , இதற்கு ஆதரவு தெரிவித்து #WeSupportPK. எனும் ஹாஷ்டேகை உருவாக்கி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். பிகே படத்திற்கு எதிராக வைக்கப்படும் வாதங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த குறும்பதிவுகள் அமைந்துள்ளன.
இது ஹாஷ்டேக் யுத்தமாக மட்டும் அல்ல, படத்தின் உள்ளடக்கம் பற்றிய தீவிர உரையாடலாகவும் அமைந்திருக்கிறது.

-சைபர்சிம்மன்-

Comments

comments