amitttஇந்திய சூப்பர் ஸ்டார் நடிகரான அமிதாப்பச்சன், சமீபகாலமாக வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வருகிறார். அந்த வகையில அவர் தற்போது நடித்து வரும் படம் ஷமிதாப். பால்கி இயக்கும் இந்த படத்தில் தனுஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அக்சராஹாசன் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். இளையராஜா இசையமைக்கிறார்

இந்த படத்தில் தனுஷ் ஒரு மாற்றுத்திறனாளி வேடத்தில் நடிப்பதாகத்தான் இதுவரை செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், தற்போது, அப்படத்தில் அமிதாப்பச்சனும், தனுஷூம், எதிரும் புதிருமான கேரக்டர்களில் நடிக்கிறார்கள். ஆரம்பத்தில் சாதாரணமாக சென்று கொண்டிருக்கும் அவர்களது கேரக்டர்களுக்கிடையே திடீரென்று ஈகோ பிரச்சினை வெடிக்குமாம்.

அப்போது, நான் சீனியர் நான் சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று அமிதாப்பச்சனும், நான் இந்த காலகட்டத்து பையன் நான் சொல்வதுதான் சரி என்று தனுசும், மோதிக்கொள்வார்களாம்.இரண்டு பேருமே நடிப்பில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதால், அவர்களது இயல்பான நடிப்பைப்பார்த்து படப்பிடிப்பு தளத்துக்கு வந்த பிறகும் காட்சிகளிலும், வசனங்களிலும் அவ்வப்போது திருத்தம் செய்து கொண்டேயிருந்தாராம் டைரக்டர் பால்கி.

Comments

comments