weஅஜீத்தின் என்னை அறிந்தால் படப்பிடிப்பு முடிந்துள்ளது. டப்பிங், ரீ ரிக்கார்டிங், மிக்சிங் உள்ளிட்ட தொழில் நுட்ப பணிகள் நடந்து வருகின்றன. இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. விக்ரமின் ‘ஐ’ படமும் அதே நாளில் கூடுதல் தியேட்டர்கள், வெளியாக இருப்பதால் என்னை அறிந்தால் படம் தள்ளிப் போகலாம் என பேச்சு அடிப்பட்டது.

இந்த நிலையில் பொங்கலுக்கு என்னை அறிந்தால் படம் வரும் என்று படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–

உலகெங்கும் உள்ள அஜீத் ரசிகர்களுக்கு புது வருடம் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் அமர்க்களமாக துவங்க இருக்கிறது. ஏற்கனவே அறிவித்து இருந்த இசையுடன் என்னை அறிந்தால் படத்தின் டிரெய்லரும் புத்தாண்டில் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் அட்டகாசமான டீசர் உலகமெங்கும் பரவியதோடு குறைந்த கால கட்டத்தில் அதிகம் பேர் பார்த்த வரலாற்றையும் உண்டாக்கியது.

ஜனவரி 1–ந்தேதி படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளிவருவது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் என்பதில் எங்களுக்கு பெருமை. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் இறுதி கட்டத்தை எட்டிக் கொண்டு இருக்கிறது. இதை தொடர்ந்து பொங்கல் பண்டிகையும் என்னை அறிந்தால் படம் பணிகள் இறுதி கட்டத்தை எட்டிக் கொண்டு இருக்கிறது. இதை தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு என்னை அறிந்தால் படம் ரிலீசாவதை தொடர்ந்து ரசிகர்களுக்கு இனிப்பு பொங்கலாக இருக்கும்.

Comments

comments