vaanga-cinema-edukkalam-4நீங்கள் சினிமா தயாரிப்பில் ஆர்வமுள்ளவரா? படம் எடுக்கலாம் என நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா? இதை முதலில் படியுங்கள்!

வாங்க சினிமா எடுக்கலாம் தொடர் ஆரம்பித்தவுடன் புதிய தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பல பிரச்சினைகளைப் பற்றி எழுதும்போது பிரச்சினைகளை மட்டும் பேசிவிட்டு போய்விடுவதில் பிரயோசனம் இல்லை என்பதும் தெளிவாய் தெரிந்தது. அதைத்தாண்டி பிரச்சினைகளுக்கான தீர்வைத்தேடிய ஒரு சிறு முயற்சி எடுத்தால் நல்லது என்று தோன்றியதால்தான் சில வாரமாய் அடுத்த அத்தியாயத்தை எழுதாமல் இந்த திரைக்கதை போட்டியைப் பற்றி திட்டமிடத்துவங்கினேன்.

புதிய தயாரிப்பாளர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த சினிமா இன்ட்ஸ்ட்ரிக்கும் உள்ள சவாலான விசயம் வியாபார வெற்றிக்கு அத்தியாவசியமான தரமான திரைக்கதைகளை தேடிப்பிடிப்பது தான்.

திரைக்கதையின் முக்கியத்துவம் முன்பு இருந்ததைவிட இப்பொது நன்றாகவே புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.

விஜய் சேதுபதி ஒரு சப்போர்டிங் ஆர்டிஸ்ட்டாக இருந்து ஹீரோவானது வேண்டுமானால் அதிர்ஷ்டமாக, உழைப்பின் பயனாக, நண்பர்கள் சரியான இடத்திற்கு சரியான நேரத்தில் கொண்டு சென்று விட்டதன் விளைவாக இருக்கலாம். ஆனால் அவர் தொடர்ந்து அசுர வேகத்தில் வளர்ந்தது தரமான திரைக்கதைகளை தேடிப்பிடித்து அதில் தன்னை இணைத்துக்கொண்டதால்தான். எத்தனையோ நட்சத்திரங்கள் பல வருடங்களாய் அப்படி இப்படி என ஒரு சரியான படத்தில் நடிக்க முடியாமல் போராட்டமாகவே போய்கொண்டிக்கையில் தனக்கு வந்த ஹீரோ என்ற வாய்ப்பை கெட்டியாய் பிடித்துக்கொண்டி அடுத்தடுத்து தரமான படங்களைக் கொடுத்து ஜெயித்தது அவரது திரைக்கதை மீதான கவனம்தான்.

நல்ல திரைக்கதை மீது அவரின் ஈடுபாடு எந்த அளவுக்கு என்றால் சூது கவ்வும் திரைக்கதையை அவர் படிக்கும் போது நடிகர்கள் யாரும் முடிவாகவில்லை. இயக்குநர் நலன் குமாரசாமியுடன் இருந்த நட்பின் காரணமாக அந்த திரைக்கதையை பிடித்தவர் அதன் தரத்தைப் பார்த்து வியந்து அதில் தான் நடிக்கிறேன் என விரும்பி சொல்லியிருக்கிறார். ஆனால் இயக்குநர் நலன் “இந்த தாஸ் காரக்டர் ஒரு ஹீரோ மாதிரி இல்லை.. ஒரு 40 வயசு உருப்படாத ஆள் அவன். அது உங்களுக்கு ஒத்துவருமா” என பிடிகொடுக்காமல் பேசியிருக்கிறார். என்னடா நாமளே போய் கேக்குறோம் இவரு கண்டுக்க மாட்டேங்கிறாறே என்ற ஈகோவெல்லாம் பார்க்காமல் தனக்கு இன்னொரு நன்பரான பீட்சா பட இயக்குநர் கார்த்திக் சுப்பராஜிடம் சொல்லி “அந்த ரோல் நான் பண்றேன் அதுக்கு ஏத்த மாதிரி தான் மாறிக்கிறேன் நீங்களும் ஒரு வார்த்தை சொல்லுங்க பாஸ்” என ரெகமென்ட் எல்லாம் பண்ணவைத்து அந்த ஸ்கிரிட்டை விடாமல் போராடி அதற்குள் தன்னை இணைத்துக்கொண்டார். “நானே போர்ஸ் பண்ணி இந்த படத்துக்குள்ள வந்துட்டேன். இப்போ நான் இந்த ரோல் பண்ணியதில் உங்களுக்கு திருப்தி இருக்கும்னு நினைக்கிறேன்” என ஆடியோ வெளியீட்டு விழாவில் மேடையிலேயே அடக்கமாய் கேட்டார். அவர் அந்த ரோல் பண்ணியதின் பலன் என்னவென்னு எல்லாருக்கும் தெரியும்.


இதன் விளைவு..மற்ற எல்லா நடிகர்களுமே நல்ல திரைக்கதையை தேடத்துவங்கியிருக்கின்றனர். ஆனால் பிரச்சினை என்னவென்றால் எங்கே தேடுவது என யாருக்கும் தெரியவில்லை. குறும்பட இயக்குநர்களுடன் நெருக்கமாய் இருந்ததால் அவர்கள் ஏரியாவை விஜய் சேதுபது குத்தகைக்கு எடுத்துக்கொள்ள மற்ற நடிகர்களுக்கு மேனேஜர்கள் மூலமாய் வரும் கதைகள் வழக்கம்போல அதிர்ஷ்டத்தை பொருத்துதான். தரமான திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து அடையாளப்படுத்தவேண்டிய அவசியம் நடிகர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

சி.வி.குமார் என்ற தயாரிப்பாளர் ஒருசில ஆண்டுகளிலேயே தமிழ் சினிமாவின் மிக முக்கியமான தயாரிப்பாளராய் வளர்ந்து நிற்பதற்கு மிக முக்கியமான காரணம் அவர் தேர்ந்தெடுக்கும் திரைக்கதைகள் தான். அவற்றை சரியான பட்ஜெட்டில் எடுப்பது அவரது இரண்டாவது திறமை.

அப்படி தரமான திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து அவற்றை சரியான முறையில் திட்டமிட்டு தயாரித்தால் எல்லா தயாரிப்பாளர்களும் சிவி.குமார்தான். ஆரம்பத்தில் அவருக்கு ஞானவேல்ராஜா கிடைத்தது போல நல்ல படத்தை நல்லவிதமாய் ரிலீஸ் செய்வதற்கு ஒரு பலமான சப்போர்ட் தேவைப்படும். அது அடுத்தகட்டம். முதலில் ஒரு புது தயாரிப்பாளரின் கவனமெல்லாம் நல்ல திரைக்கதையே தேர்ந்தெடுப்பதில்தான் இருக்க வேண்டும்.

நல்ல திரைக்கதையை தேர்ந்தெடுப்பதற்கான ஒரு வழிமுறைதான் திரைக்கதைப் போட்டிகள்.

தமிழ் சினிமாவிற்கு இதுவரை திரைக்கதை போட்டிகள் எதுவும் நடத்தப்பட்டதில்லை என்பது சற்று ஆச்சர்யமான சங்கடமான உண்மை. அதனால் நாங்களே முதல் திரைக்கதை போட்டியை துவங்கி நடத்த இருக்கிறோம். நீங்கள் ஒரு படத்தை தயாரிக்கலாம் என்ற எண்ணமுடன் இருப்பவரானால் இந்த திரைக்கதை போட்டியை உபயோகப்படுத்திக்கொள்ளுங்கள். ஒரு நல்ல துவக்கமாய் இருக்கும்.

திரைக்கதை போட்டியைக்காக எழுதப்பட்ட சில கட்டுரைகளும் வாங்க சினிமா எடுக்கலாம் தொடரின் தொடர்ச்சிதான்.

முந்தைய அத்தியாயங்கள் இங்கே: Part 1 Part 2 Part 3

தொடரும்.

 

நன்றி : முஹம்மது எ.கே. ஜிலானி

Comments

comments