vaanga-cinema-edukkalam-3-1728x800_cமுந்தைய அத்தியாயங்கள் இங்கே: Part 1 Part 2

கதை மற்றும் திரைக்கதையை தேர்ந்தெடுப்பதில் அறிமுக தயாரிப்பாளர்களின் அறியாமை எந்த அளவுக்கு அவர்களின் எதிர்காலத்தை சிதைக்கிறது என்பதற்கு ஒரு நிஜ உதாரணத்தைப் பார்ப்போம்.

சில வருடங்களுக்கு முன்பு நடந்தது.

ஒரு புதிய தயாரிப்பாளர். ஏதோ கிராமத்திலிருந்து வந்த அப்பாவியெல்லாம் இல்லை. நன்கு படித்தவர். அரபு நாட்டில் பெரிய தொழிற்சாலையை நடத்தி வியாபரத்தை வெற்றிகரமாய் நடத்திக்கொண்டிருந்தார். இனிமையா மனிதர். பக்கா ஜென்டில்மேன்.

அவர் திரைப்படம் தயாரிக்கலாம் என முடிவெடுத்து அதற்கான நடவடிக்கையில் இறங்குகிறார்.

அதையடுத்து அவரது செயல்பாடுகளை சுருக்கமாய் சொல்கிறேன். சினிமா தயாரிக்கலாம் என முடிவெடுத்தவுடன் தன்னை ரொம்ப வருடமாய் ஃபாலோ பண்ணி படம் தயாரிக்க கேட்டுக்கொண்டிருந்த உதவி இயக்குநருக்கு போன் போட்டு படம் எடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். உங்கிட்ட கதை ரெடியா இருக்கா? எனக்கேட்க அந்த உதவி இயக்குநரும் இருக்கு சார். அருமையா வந்திருக்கு என உத்தரவாதம் தர சரி ஆரம்பிச்சுடலாம் அதுக்கு என்ன செய்யனுமோ செய் என க்ரீன் சிக்னல் குடுக்கிறார். அவரது பட்ஜெட் ஒரு இரண்டு கோடிக்கு மேலே போகவேண்டாம் என்றதால் புதுமுகங்களை வைத்து எடுக்கலாம் என முடிவெடுக்கின்றனர்.

இரண்டு வாரத்துக்குள் தன் தயாரிப்பு கம்பெனிக்கு ஆபிஸ் போட்டு, பதிவு செய்து, பேங்கில் ஒரு கோடி ரூபாயை போட்டுவிடுகிறார். இரண்டு மாதங்களில் சூட்டிங் தொடங்கப்பட முடிவு செய்யப்பட்டு, அஸிஸ்டென்ட் டைரக்டரில் ஆரம்பித்து, ஒளிப்பதிவாளர், ஆர்ட் டைரக்டர், எடிட்டர், மேனேஜர், என முடிவு செய்யப்பட்டு எல்லாருக்கும் முறையாய் அட்வான்ஸ் கொடுக்கப்படுகிறது.

இசையமைப்பாளர் முடிவு செய்ப்பட்டு பாடல் பதிவு துவங்குகிறது.

படத்திற்கு வசனகர்த்தா என அப்போது கொஞ்சம் பிஸியாய் இருந்த காமெடியன்-எழுத்தாளர் புக் செயய்ப்படுகிறார். சொன்ன படி சூட்டிங் ஆரம்பிக்கிறது.

போட்ட ப்ளானில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஆகி கூட 50 லட்சம் டைர்கடர் கேட்க சரியென கொடுக்கிறார். படம் முடிந்து சொந்தமாய் ரிலீஸ் செய்ய அதற்கும் விளம்பரம், பிரிண்ட் என ஒரு 75 லட்சத்துக்கு மேல் செலவுசெய்கிறார்.

அந்தப் படம் ரிலீஸ் ஆவதற்குள் ஒரு மலையாளத்தில் பிரபல நடிகையை வைத்து ஒரு படத்துக்கு பூஜை போட்டு துவங்குகிறார். இந்த தமிழ்படத்தின் ஆடியோ வெளியீட்டில் இன்னொரு தமிழ் படத்தை அறிவிக்கிறார். அந்த புதிய படத்தின் டைரக்டர் தன் 15 வருட போராட்டதிற்கு கடவுளாய் வந்து வாழ்க்கை கொடுத்திருக்றார் என் கண்ணீருடன் இந்த தயாரிப்பாளரின் காலில் விழுகிறார்.

அந்த விழாவில் பேசும் போது அடுத்து ஒரு ஹிந்திப் படம் ஆரம்பிக்கிறேன் என சந்தோசமாய் அறிவிக்கிறார். வந்தாரை வாழவைக்கும் இந்த தமிழ்நாடு என்னையும் வாழவைக்கும் என அடக்கமாய் பேசுகிறார்.

இதுவரைக்கும் ரொம்ப நல்லாவே போய்கிட்டிருந்தது.

ஒரு தயாரிப்பாளராய் அவர் தங்கமான மனிதர்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்படி ஒரு தயாரிப்பாளர் கிடைக்கலயே என ஒவ்வொரு இயக்குநரும் ஏங்கும் படியாய் செயல்பட்டார். சூட்டிங்கில் காசில்லை என்ற பிரச்சினை ஒரு நாள் வந்ததில்லை. டைரக்டர் படத்திற்காக நியாயமாய் என்னவெல்லாம் கேட்கிறாரா அவை அனைத்தும் தடங்களில்லாமல் வந்தன. யாருக்கும் பேமன்ட் பாக்கியில்லை. செக் பௌன்ஸ் ஆகவில்லை.

விநியோகதஸ்தர்கள் புதுமுகம் என்பதால் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை என்றதும் பரவாயில்லை என சொந்தமாய் ரிலீஸ் செய்ய தயாரானார்.

எல்லாம் சரி.. ஆனால் அந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் பேசும் போது இன்னொரு விசயமும் சொன்னார். இந்தப் படம் என்னோட முதல் படம். நல்லபடியா சூட்டிங் முடிஞ்சாச்சு. டைரக்டர் நல்லா எடுத்து முடிச்சிட்டார். படத்துல கதை கொஞ்சம் சுமாரா ஓக்கேயா இருக்கும். ஆனால பாட்டு பைட்லாம் நல்லா வந்துருக்கு.. ஹீரோ ஹீரோயின்லாம் நல்லா நடிச்சிருக்காங்க. அதனால பார்த்து சப்போர்ட் பண்ணுங்க. அடுத்த படத்துல இன்னும் ஸ்ட்ராங்கான கதையா செலக்ட் பண்ணியிருக்கோம் என்றார்.

மறுபடி போன லைனை படியுங்கள். ‘கதை கொஞ்சம் சுமாராய் இருக்கு?’ இதற்கு பெயர் தான் தொழில் தற்கொலை என்பது. மற்ற எல்லாவிதங்களிலும் ஒரு சிறந்த தயாரிப்பாளராய் செயல்பட்ட அவர் செய்து மிகப்பெரிய முட்டாள்தானம் கதை, திரைக்கதையைப் பற்றி கவனமே செலுத்தாதது.

படம் எடுக்கலாம் என்று முடிவெடுத்ததும் அவர் போனில் ஒருவரியில் கேட்டதுதான் கதை. அதைப் பற்றிய ஆரோக்கியமாய் அது சரியான கதையா, இவர் சரியான டைரக்டரா என்ற விவாதமின்றி அந்தப் படத்தை ஆரம்பித்ததுதான் அவரது மிகப்பெரிய தவறு. படம் துவங்குவதற்கு முன்பே கதை சரியில்லை என படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் தெரிந்துவிட்டது. ஆனால் டைரக்டர் எல்லாரையும் புரோட்யூசரிடம் பேசவிடாமல் தூரத்திலேயே வைத்திருக்கிறார். புரொட்யூசரும் வெளிநாட்டில் இருந்தவாறே டைரக்டரிடமும், மானேஜரிடமும் மாதம் மும்மாறி பெய்கிறதா அமைச்சர்களே என்ற விதத்தில் பேசிக்கோண்டிருக்கிறார். படத்தின் முதல் செட்யூல் முடிந்ததும் ஒருவழியாய் இவருக்கு கதை ரொம்ப சுமாராய் இருக்கு என்ற பேச்சு காதில் விழ ஆரம்பிக்கிறது. அப்போதும் அவர் மூனு மாசத்துல படத்தை ரிலீஸ் பண்றதா ப்ளான் பண்ணிட்டோம். எனக்கு ப்னான் பண்ணபடி வேலை நடந்து முடியனும். ரிலீஸ் பண்ணிட்டு அடுத்த படத்துல பார்த்துக்கலாம் என்றிருக்கிறார்.

அந்த கதை ஒரு படுமட்டமான கதை. திரைக்கதையெல்லாம் கேட்கவே வேண்டாம். உண்மையில் அந்த இயக்குநருக்கு அந்தக் கதையின் மீது நம்பிக்கையே இல்லை. திடீரென படம் எடுக்க போகிறேன் என இந்த தயாரிப்பாளர் சொன்னதும் கதை என்று ஏதோ ஒன்றை சொல்லி ஓக்கே வாங்கிவிட்டார். அதன் பின் அப்படி இப்படி என அதில் ஒரு 60 சீன்களை சேர்த்து திரைக்கதை என ரெடி பண்ணிக்கொண்டார். படத்திற்கு 5 லட்சம் சம்பளம் கொடுத்து கமிட் செய்யப்பட்ட வசனகர்த்தாவுக்கே இவர் கதையை சொல்லாமல் இரண்டுமாதங்களாய் இழுத்தடித்தார் என்றால் அதன் மீது அவரிக்கிருந்த நம்பிக்கை தெளிவாய் தெரிந்தது. கதை சரியில்லை என தயாரிப்பாளரிடம் சொல்லிவிடுவார்கள் நமக்கு கிடைத்த இய்த இயக்குநர் வாய்ப்பு பறிபோய்விடும் என்ற முட்டாள்தனமான அல்ப புத்தியால் அவர் தனக்கும் தன்னை நம்பி வந்த தயாரிப்பாளர்களுக்கும் மிகப்பெரிய துரோகத்தை இழைத்தார். படம் வெளிவந்து 3வது நாளில் பெரும்பாலான தியேட்டர்களிலிருந்து தூக்கப்பட்டது.

போட்ட 3 கோடியில் 25 லட்சம் கூட திரும்ப வரவில்லை.


சாந்தமாய், எப்போதும் புன்னகையுடன் இருந்த தயாரிப்பாளரும், அவரது மனைவியும் அலுவலக்திலேயே செக்புக்கை தூக்கி எறிந்து சண்டை போட்டுக்கொள்ளும் நிலை. இந்த நஷ்டத்திலிருந்து இதன் அதிர்ச்சியிலிருந்து விடபட முடியாமல் அப்படியே காலி செய்துவிட்டு (ஆபிஸை மட்டுமில்லை..ஊரையே) பெருத்த சோகத்துடன் மீண்டும் அரபு நாட்டுக்கு சென்றார். அவர் அடுத்து செய்ய ஆரம்பித்த படங்கள் எல்லாம் அப்படியே ட்ராப்பாகியது. அதன் பின் அவரைப் பற்றிய எந்த செய்தியும் கோடம்பாக்கத்துக்கு வரவில்லை.

இவரது கதை புதிய தயாரிப்பாளர்கள் அனைவரும் திரும்பத்திரும்ப நினைவில் கொள்ள வேண்டிய பாடம். எல்லாரும் பொறாமைப்படும் விதமாய் மிகச்சரியாய் செயல்பட்ட ஒரு தயாரிப்பாளர், கதை. திரைக்கதை என்ற விசயத்தில் காட்டிய அலட்சியம் அதிர்ச்சியானது. அவரைப் பொருத்தவரை கதை வீக்கா இருந்தா என்ன, நாம இவ்வளவு செலவழிச்சி சூட்டிங் பண்ணியிருக்கோம். பாட்டு இருக்கு, பைட்டு இருக்கு.. காமெடியன் இருக்காரு. நல்லா விளம்பரம் செஞ்சிருக்கோம். கதை அடுத்த படத்துல இன்னும் பெட்டரா பண்ணிக்கலாம் என நினைத்தார். அடுத்த படம் என்பது அவருக்கு வெறும் கனவாகவே போய்விட்டது.

நல்ல கதை, திறமையாய் எழுதப்பட்ட திரைக்கதை என்பது தான் ஒரு திரைப்படத்தின் அஸ்திவாரம். அதை சரியான படமாய் கொண்டுவருவதற்குத்தான் பணம் தேவை.

அந்த நல்ல கதையையும், திரைக்கதையும் தேடுவதுதான் தயாராப்பாளரின் மிக முக்கயமான வேலை. அவருக்கு எப்படி தேடுவது என தெரியாதுது என்றால். அதற்கான ஆட்களை வைத்து அந்த தேடல் நடந்தேயாகவேண்டும். இருப்பதுலேயே பெஸ்ட் ஸ்கிரிப்ட் இதுதான் என்ற முடிவுக்கு வர 6 மாதம் எடுத்துக்கொள்ளலாம் 1 வருடம் எடுத்துக்கொள்ளலாம் தப்பில்லை. கதை சரியில்லை எனத்தெரிந்தால் படம் பாதி முடிந்திருந்தாலும் அதை நிறுத்தி அதைப் பற்றி பேச வேண்டும். அதை சரிசெய்ய என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை செய்துதான் ஆகவேண்டும்.

இந்தப் படம் சரியில்லை என்றால் அடுத்தபடம் என்ற பேச்சே இல்லை.. படத்தை விடுங்கள்..அடுத்து வாழ்க்கையே சிக்கலில் மாட்டிக்கொள்ளும் என்ற ஆதார பயம் இயக்குநருக்கு மட்டுமல்ல தயாரிப்பாளருக்கும் வேண்டும்.

சரி ஆனா கதை, திரைக்கதையெல்லாம் டைரக்டோர பொருப்பு. அவரோட டிபார்ட்மெண்ட். அதுல ஒரு தயாரிப்பாளரா நான் தலையிட்டா அது படத்தோட தரத்தை கெடுத்துடாதா. தயாரிப்பாளர் எல்லாத்துலயும் தலையிட்டு கெடுத்துட்டார்னு எத்தனை படங்களோட தோல்விக்கு காரணமா சொல்றாங்க என்ற கேள்வி எழும்.

அதற்குத்தான் நான் ஏற்கனவே சொல்லியபடி.. அவசரப்பட்டு ஒரு டைரக்டரை முடிவு செய்யக்கூடாது. ஒருவரை டைர்கடர் என முடிவுசெய்துவிட்டு பின் அதைமாற்று, இதை மாற்று என தயாரிப்பாளராய் நீங்கள் குற்றம் குறை சொல்லிக்கொண்டே தலையிட்டால் அது பிரச்சினையான படமாகவே மாறும். தயாரிப்பாளராய் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இவர்தான் டைர்கடர் என முடிவு செய்வதற்கு முன்பாய் கதை, திரைக்கதை. அந்த டைரக்டரின் திறமை, நேர்மை இதையனைத்தையும் பற்றி தீவிரமாய் பரிசீலிப்பதுதான்.

அதற்கான முறையான அமைப்புகள் இங்கே இல்லாததுதான் பெரிய வருத்தம். ஒரு தயாரிப்பாளர் படம் எடுக்கலாம் என முடிவெடுத்ததும் அவர் ஒரு நிறுவனத்தை தொடர்பு கொண்டால் அவரது பட்ஜெட், அவர் என்ன மாதிரி படம் எடுக்க விரும்புகிறார் என்பதை பொருத்து அதற்கேற்ற தரமான ஸ்க்ரிப்ட்களை தேடிப்பிடித்து அவருக்கு கொண்டு வரும் நிறுவனம் தேவை. அதுமட்டுமில்லாமல் இருப்பதிலேயே சிறந்த திரைக்கதையை தேர்ந்தெடுப்பதிலிலிருத்து, படத்துக்கான டீம், சம்பள விசயங்களில் ஏமாந்துவிடாமல், ஒவ்வொருவருக்கும் நிஜமான சம்பளத்தை முறையாக பேசி, அக்ரீமெண்டுகளை போட்டு, சூட்டிங் நடத்துதில் முறைகேடுகள் இல்லாமல் சரியான கணக்கு காட்டி, விளம்பர உத்திகளை பற்றி தயாரிப்பாளரிக்கு விவரித்து சிறந்த முறையில் படத்தை விளம்பரப்படுத்தி வியாபாரத்துக்கான வழிமுறைகளை செய்யும் ஒரு அமைப்பு, ஒரு நிறுவனம் தேவை.

இப்போது இதையெல்லாம் சில படங்களில் புரொடக்சன் மானேஜர்கள் அல்லது புரொடக்சன் கன்ட்ரோலர்கள் செய்கிறார்கள்.. சில படங்களில் டைரக்டர்கள் செய்கிறார்கள்..சில படங்களில் நடிகர்கள் அதை செய்து குடுக்கிறார்கள்.. ஆனால் இதெல்லாம் சில படங்களில்தான் நடக்கிறது. பெரும்பாலான புதிய தயாரிப்பாளர்களின் படங்கள் தோல்வியடைவதைக்கு காரணம்..இந்த வேலைகள் நடக்காததுதான். இதை செய்வதற்கான அமைப்போ, தனி ஆளோ அந்தப்படத்தில் இல்லாதது தான்.

என்னுடைய கருத்து என்னவென்றால்.. இந்த வேலையை செய்வது டைரக்டரோ, புரொட்கசன் மேனேஜரோ இல்லாமல் தயாரிப்பாளர் நேரடியாய் நியமிக்கும் ஒரு நிறுவனமாய் இருந்தால் மிகச்சிறந்தது. புரொடக்சன் கன்சல்டன்ஸி என ஒரு சேவையாய் இது செய்யப்படவேண்டும். படம் எடுக்கலாம் என ஒரு தயாரிப்பாளர் முடிவுசெய்ததும் கதை, டைரக்டரை முடிவு செய்வதற்கு முன்பு இந்த புரொடக்சன் கன்சல்டன்ஸியை தான் அவர்கள் அனுகவேண்டும். அப்போதுதான் அவர்களால் பாரபட்சமில்லாமல் ஸ்கிரிப்ட் களை தேடி கொண்டுவர முடியும். அதில் சிறந்தவற்றை தேர்ந்தெடுக்க முடியும். புரொட்யூசரிடம் நேரடியாய் தொடர்பில் இருக்கும்

அவர்கள் டைரக்டருக்கோ, மானேஜருக்கோ பரிந்து பேசி, ஜால்ரா அடிக்காமல் தயாரிப்பாளருக்கு உண்மையாய் இருப்பார்கள்.

புரொடக்சன் கன்சல்டிங் என்பது தமிழ் சினிமா தயாரிப்பளார்களுக்கு மிக அத்யாவசியான ஒரு உடனடி தேவை. எக்ஸக்கியூட்டிவ் புரொட்யூசர்கள் என அழைக்கபடும் பொருப்பிலிருப்பவர் இதைத்தான் செய்யவேண்டும். ஆனால் புரடக்சன் மானேஜருக்கும் எக்ஸக்யூட்டிவ் புரொட்யூசருக்கும் வித்தியாசம் இல்லாமல் தான் இங்கே நடைபெருகிறது.

இந்த ஒரு அமைப்பு இல்லாததால் சூட்டிங்கில் நடக்கும் குளறுபடிகள் பற்றி, 1 கோடிக்கு ஆரம்பிக்கும் படம் எப்படி 3 கோடியாகிறது என்பது பற்றி விரிவாக அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்..

 

நன்றி : முஹம்மது எ.கே. ஜிலானி

Comments

comments