jeevanபிங்கி புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் பியாரிலால் கே .குந்தேச்சா தயாரிக்கும் படத்திற்கு “ஜெயிக்கிற குதிர” என்று பெயரிட்டுள்ளனர்.

லொள்ளு, நக்கல், நையாண்டி என மலிவான காமெடிகளுக்கு பேர்பெற்றவர் ஷக்திசிதம்பரம்.

இவரும் சத்தியராஜும் இணைந்து பல வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார்கள்.

பிரபு, பிரபுதேவா, பார்த்திபன்,சுந்தர்.சி, சிபிராஜ், லாரன்ஸ்,கருணாஸ் என நிறைய நடிகர்களை வைத்து பல படங்களை எடுத்திருக்கிறார்.

கடைசியாக தானே கதாநாயகனாக நடித்து மச்சான் என்ற படத்தை இயக்கினார். அந்தப் படம் பிசினஸ் ஆகாமல் இன்னமும் பெட்டிக்குள் கிடக்கிறது.

மச்சான் வெளிவர வாய்ப்பில்லை என்பதால் மனதை தேற்றிக்கொண்டு தற்போது ஜெயிக்கிறகுதிர என்ற படத்தை இயக்க உள்ளார்.

இந்தப்படத்தில் கதாநாயகனாக ஜீவன் நடிக்கிறார். இவர் நடித்த படங்கள் வரிசையாக தோல்வியடைந்தன.

அதோடு இவர் நடித்த கிருஷ்ணலீலை என்ற படம் இன்னும் வெறிவரவே இல்லை.

சில வருட இடைவெளிக்கு பிறகு ஜீவன் நடிக்கும் படம் இது.

கதாநாயகிகளாக மூன்று பேர்… டிம்பிள் சோப்டே, அம்பிகாசோனி, திராவியா நடிக்கிறார்கள்.

மற்றும் சரண்யா, ஜெயபிரகாஷ்,கருணாகரன், தம்பிராமையா, ஜி.ஆர், கோவைசரளா, சிங்கம்புலி,மனோபாலா, மயில்சாமி, இமான்அண்ணாச்சி, மதுமிதா, சித்ராலட்சுமணன் இவர்களுடன் பவர்ஸ்டார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

“ஜெயிக்கிற குதிர” படம் பற்றி இயக்குநரிடம் கேட்டோம்….

முடியாது என்பது முட்டாள்தனம். முடியும் என்பது மூலதனம் என்கிற ஆறு வார்த்தைகள் தான் கதைக் களம் ! இதை வைத்து காமெடி, காதல்,கலாட்டா படமாக உருவாகிறது. தொடர்ந்து அறுபது நாட்களில் படப்பிடிப்பு முடிவடைகிறது. சென்னை, பாண்டி, மும்பை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது என்றார்.

Comments

comments