மலையாளத்தில் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் மஞ்சு வாரியர் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் நடித்த ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’. படம் சூப்பர் ஹிட். கணவன் திலீப்புடன் விவாகரத்தான பிறகு சோர்ந்து போயிருந்த மஞ்சு வாரியருக்கு அந்தப்படம் சினிமா மற்றும் சொந்த வாழ்க்கையில் பெரும் மறுமலர்ச்சி என்றே சொல்லவேண்டும். ஒரு பெண் வாழ்க்கையில் ஜெயிக்க வயது ஒரு பொருட்டே அல்ல என்பது படத்தின் களம்,

Jyothika_EPS

அந்தப்படத்தை பார்த்த நாளிலிருந்தே நம்ம ஜோதிகாவுக்கு அதை தமிழில் அதே இயக்குநரை வைத்து ரீ மேக் செய்து மஞ்சு வாரியரின் கேரக்டரில் நடிக்கவேண்டுமென்ற ஆசை. அதை அரைகுறை மனசுடன் ஒப்புக்கொண்ட சூர்யா படத்தின் ரீமேக் உரிமையையும் அப்போதே வாங்கி வைத்திருந்தார். அவ்வளவுதான் அடுத்த நாளிலிருந்தே ‘மருமகளை நடிக்க அனுப்பமுடியாது’ என்று குணச்சித்திர நடிகர் சிவக்குமார் முகம் சிவக்க ஆரம்பித்துவிட்டார்.

ஏற்கனவே அவர் மேல் கடும் எரிச்சலில் இருந்த ஜோதிகா இம்முறை இதற்கு முன்பு போல் விட்டுக்கொடுப்பதாயில்லை. இம்முறை தேவைப்பட்டால் வீட்டையும் சூர்யாவையும் விட்டு வெளியேறி நடிப்பில் முழுமூச்சாய் இறங்குவதாய் இருந்தார்.

சூர்யாவின் வீட்டில் கடந்த நான்குமாதங்களுக்கும் மேலாய் நடந்து வந்த சண்டையில் ஒரு வழியாக ஜோதிகா வென்றார். இந்த யுத்தம் ஜோதிகாவுக்கு சாதகமாய் முடிந்ததிலிருந்து சிவக்குமார் சூர்யாவுடன் பேச்சைக்குறைத்துக்கொண்டார்.

சுமார் 8 வருட இடைவெளிக்குப்பின் இன்று ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ தமிழ் ரீமேக் படப்பிடிப்புக்காக அரிதாரம் பூசினார் ஜோதிகா.

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் ஜோதிகா ஜனாதிபதியை சந்தித்து பூச்செண்டு கொடுக்கும் காட்சி படமாக்கப்பட்டது.

வாங்க ஜோதிகா ரசிகர்களும் உங்களுக்கு பூச்செண்டோடு காத்திருக்காங்க.

Comments

comments