bol-baby-bol-music-launch-9தமிழ் திரையுலகில், நடிகர், இயக்குனராக இருந்த பிரபுதேவா, “வாண்டட்” படத்தின் மூலம், பாலிவுட் திரையுலகில், இயக்குனராக அறிமுகமானார். வாண்டட் படம், போனி கபூரின் நிறுவனம் தயாரித்தது. படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில், போனி கபூர், பிரபுதேவாவை அணுகி, தன்னுடைய பேனரில், மீண்டும், ஒரு படம் பண்ண வேண்டும் என்று கேட்டதற்கு, பிரபுதேவா, தான் தற்போது பிசியாக இருப்பதாகவும், அடுத்த 2 ஆண்டுகளுக்கு தான் கமிட் ஆகி உள்ளதால், தங்களது பேனரில் படம் தயாரித்து தர முடியாது என்று கூறியுள்ளார். பிரபுதேவா, தற்போது தன் இயக்கத்தில் விரைவில் வெளிவர உள்ள ஆக்ஷன் ஜாக்சன் பட புரோமோ நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதன்பின் சிங் இஸ் பிளிங் படத்தின் சூட்டிங்கை விரைவில் துவக்க உள்ள பிரபுதேவா, பாலாஜியின் அடுத்த பட வேலைகளில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

comments