0f8arya_fdfsanthanam_rajesh002 (1)2014ம் ஆண்டின் நிறைவு பகுதி வந்துவிட்டது. இதனால் இந்த ஆண்டு எப்படியாவது படத்தை வெளியிட வேண்டும் என்கிற நோக்கில் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் படங்களை தூசி தட்டி எடுத்து வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

கில்லாடி

நான்கு வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட படம் கில்லாடி. பரத் பழனி, ஆறுமுகம் என ஆக்ஷன் படங்களில் இறங்கியபோது அதே வேகத்தில் ஆரம்பிக்கப்பட்ட படம். ஏ.வெங்கடேஷ் இயக்கினார். எஸ்.ஜே.சூர்யாவால் அறிமுகப்படுத்தப்பட்ட நிலா ஹீரோயினாக நடித்தார். இப்போது அவர் பீல்டிலேயே இல்லை. சேலம் சந்திரசேகர் தயாரித்தார். தயாரிப்பாளரின் நிதி பிரச்சினையால் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தப் படத்தை இப்போதும் டிசம்பரில் வெளியிடும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள்.

இசை

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட படம். எஸ்.ஜே.சூர்யா, தெலுங்கு பக்கம் சென்று அங்கு ஒரு பிளாஃப் படம் கொடுத்துவிட்டு அப்படியே யூ டேர்ன் அடித்து மீண்டும் வந்து ஆரம்பித்த படம். இரண்டு இசை கலைஞர்களுக்கு இடையேயான ஈகோ படம். சாவித்ரி என்ற புதுமுகம் ஹீரோயின். சத்யராஜ் வில்லன். இசையும் இயக்கமும் எஸ்.ஜே.சூர்யா. டிசம்பரில் ரிலீசாகிறது.

 

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் ஐ படமும் இரண்டு வருடங்களுக்கு மேலாக தயாரிப்பில் இருக்கும் படம். பிரமாண்ட படம், பெரிய படம், விக்ரமின் கெட்அப் சேஞ்ச், தயாரிப்பாளரின் நிதி நெருக்கடி இவற்றால் படம் தாமதம் ஆனது. தற்போது பொங்கலுக்கு வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

திகார்

இயக்குனர் பேரரசு தமிழ், மலையாளத்தில் இயக்கும் படம். உன்னி முகுந்தன், அகன்ஷா, கிருதியா என்ற புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். பார்த்திபன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இதுவும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தயாரிப்பில் இருந்த படம். பாடல்களை நாளை வெளியிடுகிறார்கள். படத்தை டிசம்பரில் வெளியிடுகிறார்கள்.

ரெண்டாவது படம்

 

தமிழ படம் இயக்கிய சி.எஸ்.அமுதன் இயக்கிய அடுத்த படம் இந்த ரெண்டாவது படம். இதுவும் நீண்ட நாள் தயாரிப்பில் இருக்கும் படம். விமல், அரவிந்த் ஆகாஷ், ரிச்சர்ட், விஜயலட்சுமி, ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார்கள். தரணி என்பவர் தயாரித்துள்ளார். இந்த படமும் டிசம்பரில் ரிலீசாகிறது.

Comments

comments